பக்கம் எண் :

வடமொழிச் சென்ற தென்சொற்கள்5

அர
  அரி + அம் = அரம் - அரன்.
  - ஓம் - ஓங்காரம் or ஓகாரம்.

    ஓவென்பது மூல வொலிக்குறிப்பு. ஒல், ஒலி, ஓலம், ஓசை, ஓதை முதலிய    ஓசைபற்றிய சொற்களெல்லாம் ஒகர ஓகார முதன்மொழிகளாதல் காண்க. ரீ என்பது ரீங்காரமானாற் போல ஓ என்பது ஓங்காரமாயிற்று.

    உரு + திரம் + ஆக்கம் = உருத்திராக்கம் - ருத்திராக்ஷம் (உருத்திராக்க          விளக்கங் காண்க.)

  வி + பூதி = விபூதி. புழுதி

-

பூதி; வி, உபசர்க்கம்.
  ஆணவம் : ஆள் - ஆண்

-

ஆண்மை

-

ஆணவம்.  
  மாய + = மாயை: ஐ. - தொ. பெ.வி.  
  காமி + அம் = காமியம், காம + இயம் என்றும பிரிக்கலாம்.

    இயம் ஒரு தொழிற்பெயர் விகுதி.

  காம் + அம் = காமம்.
  காம் + அர் = காமர்.

    குமரன், குமரி - கொம்மை(திரட்சி) என்னும் பண்பினடியாகப் பிறந்தவை. cf. virgin Gk. orago - to swell. சேய் (Zeus) முருகன், வேலன் என்பன குமரற்கு மறுபெயர்கள்.

     சண்டிகை - சள் - சள்ளை - சண்டை - சண்டன் - சண்டி -சண்டிகை.

  காளி. : கள் - கள்ளம் - காளம் - காளி.
        - களம் - களங்கம் = கருப்பு.
  சினன் : சின + அம் = சினம் - சினன்.
  விஷ்ணு : விண் - விண்டு. விண்ணைப்போல் நீலமாயும் எங்கும் நிறைந்துமிருப்பவன். 
         
  மாயோன் : மா - மாய் - மாயோன்.  மா = கருப்பு.
  கிருஷ்ணன் : கள் - கள்ளன் - கண்ணன்.    

     மாயோன், கண்ணன் முதலிய பெயர்கள் கிருஷ்ணாவதாரத்திற் புதிதாய்     உண்டானவையல்ல. அதற்கு முந்தியே வழங்கினவை. "மாயோன் மேய காடுறை யுலகமும்" என்று தொல்காப்பியத்திற் கூறப்பட்டிருப்பது காண்க.

  அரங்கன் :- அரங்கம் - அரங்கன். அரங்கம் = ஆற்றிடைக்குறை.
  இராமன் :- இராமம் - இராமன்.      

    இராமம் என்பது திருமண்காப்பு. இராமம் = இரேகை வரி. இராமக் கரும்பு என்னும் வழக்கு நோக்குக. வடநாட்டில் இதைத் தவறாக நாமம் என்று வழங்குகின்றனர். இராமர் ஒரு வைணவ பக்தர். இராமருக்கு முன்பே மால் வழிபாடு தமிழ்நாட்டிலிருந்தது.