பக்கம் எண் :

6தென்சொற் கட்டுரைகள்

இரண

    இரண்டு, அலம்பு, இலக்கு, உலாத்து முதலிய சொற்கள் உயிர் முதல் நீங்கி வழங்குவதுபோல அரங்கன் இராமன் முதலிய சொற்களும் உயிர் முதல் நீங்கி வழங்குகின்றன.

  நாராயணன் : நாரம் + அயனன்.            
  வருணன் : வார் + அணம் - வாரணம் - வாரணன் - வருணன்.

    வார் + இ = வாரி. வார் + இதி = வாரிதி.

    ஆத்மா: ஆன் + மா = ஆன்மா. ஆன் = பசு. மா பெருமைப் பொருள் விகுதி. மான் என்பது ஈறு குறைந்து நின்றதெனினும் ஒக்கும். Gk. animos. வடமொழியில் ஆத்மா சரீரத்தைக் குறிக்கும்.

    நரன் : நரை + அன் = நரன் = நரைப்பவன்.

    பதி     : பதிக்குத் தலைவன்; இடவாகு பெயர். பதி = நகர், வீடு.

    பசு     : பாசத்தாற் கட்டப்பட்டது பசு.

    பாசம்   : பசுமை - பச்சை - பாசி - பாசம். பாசம்போற் பிணிக்குங்

    கயிறு   : கயிறுபோற் பிணிக்கும் மலம்.

    பாசம் என்பதற்கு ஆசை யென்று பொருள் கூறினும் பொருந்தும்.

    நரகம்   : நரகல் - நரகம்.

    cf. dungeon, from dung.

    காயம் - ஆகாயம். காயம் = கருப்பு. 'காயப் பெயர்வயின்'

    என்று தொல்காப்பியத்துள் வருதல் காண்க.

  பூதம் : பொது -

பொதுக்கு

-

பொந்து -

பூதம்.

 

 
  உலகம் : உல +

=

உலகு.

உலகு

+

ம்

=

உலகம்.
  உலத்தல் = அழிதல்.                

    நீர் + அம் = நீரம் - நாரம் = நார் + அம்.

    சலி + அம் = சலம். சலி + அனம் = சலனம். சலி + அதி = சலதி. சலித்தல் = அசைதல். சலிப்பு என்னும் உலக வழக்கையும் அசைவு என்னும் மெய்ப்பாட்டையும் ஒப்பு நோக்குக.

    காலம் - கால் + அம் = காலம். சமை + அம் = சமையம். (விதி முதனிலைத் தொழிலாகுபெயர்.)

வானநூல்

    சூரியன் - சுர் - சுரன் - சூரன் - சூரியன். Gk. sol. சுர் என்பது ஒரு      வெம்மைக் குறிப்பு.

  சுர் +

அம்

=

சுரம்

=

காய்ச்சல்,

பாலைநிலம்.
  மதி - காலத்தை மதித்தற் கிடமானது.