பூமி
வட்டமாயிருப்பது தமிழர்க்குத் தெரிந்திருந்தது.
இடை யென்னும்
உறுப்புப்பெயர் அம்சாரியை பெற்று இடமானாற் போல, தலையென்னும் உறுப்புப்பெயர் அம்சாரியை
பெற்றுத் தலமாயிற்று. இடப்பெயர்கள் பெரும்பாலும் சினைப்பெயர்களாகவே யிருக்கும்.
"கண்கால் புறமகம் உள்ளுழை கீழ்மேல்
பின்சார்
அயல்புடை தேவகை எனாஅ
முன்னிடை கடைதலை
வலமிடம் எனாஅ
அன்ன பிறவும்
அதன்பால என்மனார்" (தொல். சொல். வேற். 21)
மண்டலம் -
மண்டிலம். மண்டலித்தல் - வட்டமிடுதல்.
திங்கள் மண்டிலம்
= திங்கள் வட்டம்.
கண்டம்: கண்
- கண்டு - கண்டம்.
தீவு: தீர் + உ =
தீர்வு - தீவு. தரைப் பாகத்தினின்றும் தீர்ந்திருப்பது. இதைத் த்வீபம் என்று திரித்து இரு
பக்கத்தில் நீரால் சூழப்பட்டிருப்பதென்று பொருளுரைப்பர்.
இலக்கணம்:
|
இலக்கு |
+ |
அணம் |
= |
இலக்கணம் |
- |
லக்ஷணம். |
|
இலக்கு |
+ |
இயம்
|
= |
இலக்கியம்
|
- |
லக்ஷியம். |
இலக்கித்தல் =
எழுதுதல் (சீவக. 180)