10
10
சிலை என்னுஞ் சொல் வரலாறு
உருவம், சிலை, படிமை என்னும்
ஒருபொருள் முச்சொற்களுள் முதலதும் ஈற்றதும் ஐயுறவற்ற தூய தென்சொற்கள்.
உருவம்
உரு என்னும் வடிவும்
உருவத்தைக் குறிக்கும்.
|
உருக்கல் |
=
|
கோவில் கட்டியவருடைய
கற்சிலை. இது கட்டடக் கலை வழக்கு. |
|
உருவம் |
=
|
சிலை (பிரதிமை). |
|
உருவாரம் |
=
|
சிலை (பிரதிமை) இது உலக
வழக்கு. |
|
உருவம் என்பது ரூப என்னும்
வடசொல்லின் திரிபென்பர். இது ஏமாற்று. |
|
உருத்தல் |
= |
தோன்றுதல். |
|
உரு |
= |
தோற்றம், வடிவம், வடிவுடைப்
பொருள், படிமை. |
|
உரு - உருவு - உருபு |
= |
வேற்றுமை வடிவம்; அதைக்
குறிக்கும் எழுத்து அல்லது அசை அல்லது |
|
|
சொல். |
உருவம் என்ற
தென்சொல்லே வடமொழியில் ரூப எனத் திரிந்துள்ளது.
படிமை
படி = ஒப்பு, வகை,
உருவம் (சீவக. 1156). அப்படி =அதுபோல், அவ்வகை. ஒருபடியாய் (வகையாய்) வருகிறது. ஒரு வடியாய்
என்பது நெல்லை வழக்கு.
|
படியோலை |
=
|
மூல மொத்த ஓலை. |
|
படி |
=
|
ப்ரதி (வ.) இதையும் ப்ரதி
> படி எனத் தலைகீழாய்க் காட்டி ஏமாற்றுவர் |
|
|
வடவர். |
|
படி - படிமை - ப்ரதிமா (வ.)
- பதுமை (தற்பவம்). |
|
படிமை -
படிமம் |
=
|
நோன்புக் கோலம்,
தவவடிவம். |
|
(படி - படிவு - படிவம்; படிவு -
வடிவு; படிவம் - வடிவம்.) |
|