|
தமிழ்ப் பகைவர்கள் இதையே
சான்றாகக் கொண்டு, இதிலிருந்துதான் நம் தமிழ்
எழுத்தே தோன்றியது, அஃதாவது அசோகர் காலத்திய
பிராமி எழுத்து கி.மு. இரண்டாம் நூற்றாண்டில்தான்
தமிழகத்தில் தோன்றியது; இதிலிருந்துதான் தமிழ்
நெடுங்கணக்கு வகுக்கப் பெற்றது; தொல்காப்பியம்
தோன்றியது அதற்குப் பிற்பட்டுத்தான் என்று,
போன உலகத் தமிழ் மாநாட்டுக் கருத்தரங்கிலே, ஐராவதம்
மகாதேவன் என்னும் ஒருவர், தில்லியிலே
இருப்பவர், எழுதி அச்சிட்டுப் படித்துவிட்டுப்
போய்விட்டார். ஆனால் அதற்கு எதிர்ப்பு ஒன்றும்
இல்லை. அந்தக் கருத்தரங்கோ ஒரு சந்தைக் கூட்டம்
போல் நடந்தது.
இந்த உலகத்தமிழ் மாநாட்டுக்
கருத்தரங்கு உள்ளதே, அதைப் பற்றி ஒன்று
உங்கட்குத் தெரியவேண்டும். இது தனி நாயகம்
என்ற வையாபுரியின் வேலை; இவ்வளவும். மூன்று
மாநாடுகள்! நடந்து விட்டன. பெரிய மாநாடுகள்
உலகத் தமிழ் மாநாடுகள் கூட்டத்தினுடைய
ஆரவாரத்தையும் மக்கள் தொகையையும் கண்டே பலரும்
மயங்கி விடுகிறார்கள். ஆனால் ஒருவரும்
ஆய்ந்துபார்ப்பதில்லை. இப்பொழுது ஒரு
செய்தியைச் சொல்கின்றேன். இப்படி நடந்தால்
எப்படியிருக்கும் என்று நீங்கள்
எண்ணிப்பாருங்கள்:
ஒரு பெரிய மாநாடு நடக்கிறது என்று
வைத்துக்கொள்வோம்; இங்கிலாந்திலே! அஃது உலகத்தமிழ்
மாநாடு. அதற்குத் தலைமை தாங்குகிறவர்
இங்கிலாந்துப் பேரரசியார். அதற்குக்
கொடியேற்றி வைக்கிறவர் அமெரிக்கக் குடியரசுத்
தலைவர் நிக்சன். அதைத் தொடங்கி
வைக்கிறவர் கோசிசின் அல்லது குரோமிகோ
போன்றவர். சீனக் குடியரசுத் தலைவர் சூ.என்.இலாய்
போன்றவர்கள் அதிலே பேச்சாளர்கள் என்று
வைத்துக்கொள்வோம். இதைப் பார்க்கிறவர்கள்
என்னவென்று நினைப்பார்கள். "அடேயப்பா,
உலகம் முழுவதும் தமிழ் மாநாட்டை நடத்தத்
தொடங்கி விட்டார்கள்." என்று
ஆராய்ச்சியாளர்கள் கூடப் பெருமையாகத் தான்
பேசுவார்கள். ஆனால் என்ன பயன் என்று நீங்கள்
கருதிப்பார்க்க வேண்டாமா? இப்படி
இவர்களெல்லாரும் சேர்ந்து ஒரு தமிழ் மாநாட்டை
நடத்துவதென்றால் என்ன நடக்கும்? இப்படித்தான்
இன்று நடக்கிறது.
இந்தத் தனிநாயகம் என்கிறவர்
பிறர் முயற்சியாலே ஒரு பெயர் பெறுவதிலே ஒரு தனிநாயகம்!
(சிரிப்பு!) அவருடைய வரலாறெல்லாம் உங்களுக்குத்
தெரியாது. அவர் முதலில் Tamil Culture என்ற ஓர் இதழைத்
தொடங்கினார். அதில் தம்மைத் தலைமைப்
பதிப்பாசிரியராகக் குறித்துக் கொண்டார்.
அதற்கப்புறம் ஈழத்திலே பல்கலைக்
கழகத்திலே ஒரு பதவிக்குத் தாண்டினார்.
அங்கிருந்து மலையாவிலே ஒரு நல்ல வாய்ப்பு
வந்து சேர்ந்தது. அங்கே பேராசிரி யராக
விருக்கிறார். முதல் முதலிலே அங்குத்தான்
உலகத்தமிழ் மாநாடு. முதன் முதலில் தமிழ்
நாட்டில்தான் நடப்பதா மலையாவில் நடப்பதா?
அதோடுகூட, தமிழ் என்ன ஒரு
|