|
வழக்கற்ற மொழியா? எந்த மொழியில்
தமிழ் மாநாடு நடக்க வேண்டும்? ஆங்கில மொழியிலா
நடப்பது? இப்படி ஆங்கிலத்துக்கென்று ஒரு மாநாடு
நடப்பதானால் வேறு ஒரு மொழியிலா
நடத்திக்கொண்டி ருப்பார்கள்? மற்ற மொழிகளிலே
வேண்டாம்; பிரஞ்சு மொழியில் நடத்துவதென்றாலும்
அதற்கு இணங்குவார்களா? தமிழ் ஓர் உயிர் மொழி.
அதற்கென்று ஒரு மாநாடு நடப்பதென்றால்
தமிழிலன்றோ நடக்க வேண்டும். அதில்
பேசுகிறவர்களெல்லாரும் தமிழில்தான் பேசுதல்
வேண்டும். கட்டுரை படிப்பதென்றாலும் தமிழில்தான்
எழுதிப் படித்தல் வேண்டும். பேசவோ எழுதவோ
தெரியாவிட்டால் பார்வையாள ராகத்தான்
வந்திருக்க வேண்டுமே தவிர, கருத்துக் கூறமுடியாது.
(கைதட்டல்). ஆனால் இந்த மாநாடுகள் அப்படியில்லை.
எவரும் எந்த மொழியிலும் பேசலாம். அந்தக்
கருத்தரங்கிற்கு ஒரு தலைவரு மில்லை. ஒரு நடுவரும்
இல்லை.
இங்குத் தமிழகத்தில் நடந்த உலகத்
தமிழ்க் கருத்தரங்கில், காமில் சுவலபெல்
என்னும் ஒருவர்; அவர் ஓர் ஆரிய வெறியர். அவர்
என்ன படித்துவிட்டுப் போனார் தெரியுமா? Introducing
Tamil Literature என்னும் ஒரு சிறு சுவடி.
ஆங்கிலத்திலே எழுதிப்பரப்பி விட்டுப்
போய்விட்டார். அதில் வரும் ஒரு பகுதியைச்
சொல்லுகின்றேன். "மறைமலையடிகள்,
சோமசுந்திர பாரதியார், பாரதிதாசன் இந்த
மூவரும் தமிழைக் கெடுத்தவர்கள்."
எப்படியிருக்கிறது பாருங்கள்! (சிரிப்பு) எவ்வளவு
சிறந்த, அழகிய உண்மை! அவர் ஆராய்ச்சியினாலே
கண்டுபிடித்தது! (பெருஞ்சிரிப்பு) "இவர்களுடைய
கொள்கையினாலே உலக அறிஞர்களுக்குள்ளே
பிரிவினையும் பகைமையுந்தாம் உண்டாகும். இவர்கள்
நூல்கள் நாளடைவில் தாமாக ஒழிந்துபோம்" -
இப்படி எழுதி வைத்திருக்கிறார்கள். இப்படிப்
பட்ட இவர்களையெல்லாம் வைத்துக் கொண்டு ஒரு
மாநாடு நடத்தினால் எப்படியிருக்கும்? நீங்க
ளெல்லாம் நன்றாக எண்ணிப்பாருங்கள்.
மறைமலையடிகள் தமிழுக்காகப்
பட்டபாடு எவ்வளவு? அவர் தமிழில் மட்டுமல்லர்,
சமசுக்கிருதத்திலும், ஆங்கிலத்திலும் வல்லவர்.
அவருடைய ஆங்கில நடை எவ்வளவு பெரிய
பட்டந்தாங்கி ஆங்கிலப் படிப்பாளிகளுக்கும்
வரவே வராது. மிக அருமையாக எழுதுவார்,
ஆங்கிலத்திலே! அழகிய நடை; எழுத்தும் மிக
அருமையாக விருக்கும். அவர்கள் இவ்வாறிருந்தும்
அவரைப் பழித்துவிட்டுப் போயிருக்கிறார். பாரதிதாசன்
ஏதோ தனிப்பட்ட ஒரு கொள்கையுடையவராக இருந்தும்,
தமிழுக்காக எவ்வளவோ பாடுபட்டார். சோமசுந்திர
பாரதியாரைச் சொல்ல வேண்டுவதில்லை.
இப்படிப்பட்டவர்களையெல்லாம் அவர்கள் பழித்து
விட்டுப் போய்விட்டார்கள் அவர் (காமில்
சுவலபெல்) தமிழை எப்படி ஆராய்ந்திருக்கிறார்.
எந்தெந்த நூல்களை அடிப்படையாகக் கொண்டார்
என்றால், நற்றிணை என்ற தொகை நூலையும்,
சானகிராமன் என்பவர் எழுதிய நாலுவேலி நிலம்
என்ற நாடகத்தையும் வைத்தே தமிழை
|