|
ஆராய்ந்திருக்கிறார். அந்த நூல்
தஞ்சையில் நடந்த ஒரு கதையை அடிப்படையாக வைத்து
எழுதப் பெற்ற நூல். அதைப் போன்ற கடுங் கொச்சை
நடையான ஒரு நூல் இருக்கவே முடியாது! சேரி மக்கள்
பேசுவதைவிட மிகக் கடுமையான கொச்சை நடையை
உடையது. அதை வைத்துக் கொண்டு தமிழை
ஆராய்ந்துள்ளார். (சிரிப்பு) தமிழ் மொழியி
னுடைய காலம் (தமிழ் தோன்றியதே) கி.மு. 1500 என்ற
முடிவுக்கு வந்திருக்கிறார். இதைப் பார்த்த
பின்னும் கேட்ட பின்னும் நம்முடைய
பேராசிரியர்கள் எல்லாரும் அக்கருத்தை
எதிர்க்காமல்தான் இருக்கிறார் கள். இப்படி,
அதாவது இந்தியர்களிலேயே சிலரைக் கண்டாலும் நம்
பேராசிரியர்கள் அஞ்சிக்கொண்டுதான்
இருக்கிறார்கள். ஆங்கிலேயர் என்றாலோ மிகவும்
அஞ்சுகிறார்கள்.
இப்பொழுது நம் சென்னை ஆளுநர் கூட
என்னென்னவெல் லாமோ தமிழைப் பற்றிப்
பேசுகிறார், ஆனால் அவர் கருத்தைக் கேட்கின்ற
நம் புலவர்கள் ஒருவருக்கும் பேசுவதற்கு நா
வருவதில்லை. அவர் என்ன சொன்னாலும்
கேட்டுக்கொண்டு அப்படியே இருந்துவிடு
கின்றார்கள். ஆகவே இந்தத் துறையில் எவர்
உண்மையான அறிஞர் என்று அறிதல் வேண்டும்.
அப்படிப்பட்டவர்களுக்குத்தான் நாம் இதுபோன்ற
மாநாடுகளில் இடம் தருதல் வேண்டும். இந்தத் தனி
நாயகம் அந்த உலகத் தமிழ்க்கழகத்திற்கு பிலியோசா
என்னும் பிரெஞ்சுப் பேராசிரியர் ஒருவரையே
தலைவராக வைத்திருக்கின்றார். அவர்
சமசுக்கிருதம் படித்தவர். தமிழறியாத ஒரு பெருமாள்.
அவர் எப்படிப் படித்தார் என்றால், இக்கால்
ஆங்கிலம் போல் அக்கால் இந்தியா முழுவதும்
சமசுக்கிருதந்தான் பொது மொழியாக இருந்தது.
அதன்வழியாக - அதனின்றுதான் தமிழ் வந்தது
என்னும்படி - தமிழைப் படித்தார். இப்பொழுது
அதைவிடக் கேடாக இருக்கிறது. வரவரக் கழுதை
தேய்ந்து கட்டெறும்பாகி, அதுவுந் தேய்ந்து
சிற்றெறும்பாகி, பிறகு ஒன்றுமில்லாமற் போன
வகையில், தேய்ந்து காய்ந்து தேரைக்கால் போல
ஓய்ந்து வருகிறது இந்த உலகத் தமிழ் மாநாடு. அதுவும்
முன்பு நடந்த பாரீசு உலகத் தமிழ் மாநாட்டில்,
மொகஞ்சதோரா நாகரிகம் திராவிடருடையதா
ஆரியருடையதா என்று ஆராயும் பொறுப்பு யாரிடத்தில்
ஒப்படைக்கப் பெற்றது தெரியுமா? நான் சொன்னேனே
இந்த ஐராவதம் மகாதேவனிடத்தில். அஃதாவது
பிராமி எழுத்திலிருந்து தமிழ் எழுத்து
தோன்றியதென்று சொன்னாரே அவரிடத்தில்.
இப்படியெல்லாம் செய்கிற பொழுது, அவர்கள்
(காமில் சுவலெபில் போன்றவர்கள்) ஏன் அப்படி
எழுதமாட்டார்கள் என்று கேட்கின்றேன். தேளுக்கு
அதிகாரம் கொடுத்தால் நிமையத்திற்கு ஒரு முறை
கொட்டும். இனி, ஒரு முறை மட்டுமன்று; மூன்று முறை,
பன் முறையும் கூடக் கொட்டும். அதைப் பிடித்து
வைத்துக் கொண்டு கொட்டுகிறதே கொட்டுகிறதே
என்று சொன்னால் அந்த முட்டாளுக்கு நாம் என்ன
சொல்வது? "நன்றாகக் கொட்டட்டும்" என்றுதான்
சொல்ல வேண்டும். இப்படி,
|