பக்கம் எண் :

தமிழன் பிறந்தக தீர்மானிப்புக் கருத்தரங்கு69

அவர் "இந்நூல் வரலாற்றுக்குச் சிறந்த வழிகாட்டியாக விருக்கிறது. நான் அயல் நாட்டானாக விருக்கிறபடியால், இந்த நூல் கருத்தின்படி என்னால் வரலாற்றை எழுத முடியவில்லை. பின்னால் இந்திய வரலாற்றை விரிவாக எழுதப்போகும் ஒரு வரலாற்றாசிரியர் இந்த நூலைக் கடைப்பிடித்து, அந்நூலாசிரியர் கூறுகிறபடியே இந்திய வரலாற்றை எழுதுவாராக" என்று குறிப்பிடுகின்றார். ஆனால் நீலகண்ட சாத்திரி யாரோ, வேண்டுமென்றே, "அவர் இப்படிச் சொல்லியுள்ளார்; இவர் அப்படிச் சொல்லியுள்ளார்" என்று தம் விருப்பம் போலவே எழுதி வருகிறார். அவர் எழுதியதாகச் சொன்னேனே History of South India-அந்த நூலில், "தமிழர் ஆறு இனம் சேர்ந்த ஒரு கலவை இனம்" என்று சொல்லியிருக்கின்றார். நீக்ரோ இனம், ஆத்திரேலிய இனம், அர்மீனிய இனம், மங்கோலிய இனம், நடுக்கடற் பகுதியில் வாழ்ந்த ஒரு மக்களினம் முதலிய ஆறு கலவையினம் என்று சொல்லியி ருக்கின்றார். இதையெல்லாம் படிக்கின்றபொழுது எப்படியிருக்கின்றது தெரியுமா? இப்படிப்பட்ட நூல்களை இந்தக் காலத்திலே எழுதும் படியும் தமிழர்கள் விட்டுக் கொண்டிருக்கின்றார்களே என்று வருந்த வேண்டியுள்ளது. இந்த நிலைகள் வேண்டுமானால் எல்லாருக்கும் தெரி யாமல் இருக்கலாம். ஆனால் படித்தவர்களுக்காகிலும் தெரிய வேண்டுமா, இல்லையா? இப்படிப்பட்ட நூல்கள் வந்து கொண்டுதாம் இருக்கின்றன. வாங்கப்பெற்றுப் படிக்கப்பெற்றும் வருகின்றன. ஆனால் இவற்றையும் படித்துக் கொண்டு "எங்கெழிலென் ஞாயிறு எமக்கு" என்று கவலைப் படாமலுந்தாம் இருந்து வருகின்றனர். இப்படிப்பட்ட நிலைகள் தங் களையும் கெடுத்துக் கொள்வது மட்டுமன்று. தங்கள் முன்னோரையும் பழிக்கின்றதுமாகும். இப்படியிருந்தால் தமிழர் மாந்தர் என்று சொல்லிக் கொள்வதில் என்ன பயன் ஏற்படும்?

மாந்தனின் வளர்ச்சி வெறும் உடல் வளர்ச்சி மட்டுமில்லை. உள்ளுயிர் இருக்கின்றதே அதுதான் மாந்தன். அந்த அகக் கரண வளர்ச்சியடையா விட்டால் மாந்த நிலையை அடையமுடியாது. வெறும் உடம்பு மட்டும் வளர்வதாக வைத்துக் கொண்டால் அஃது அஃறிணை நிலை என்றுதான் நாம் சொல்லுதல் வேண்டும். அதனால்தான் நாம் இதைப்பற்றியெல்லாம் சொல்ல வேண்டியிருக்கின்றது. பகுத்தறிவு, நெஞ் சுரம், தன்மானம் இந்த மூன்றும் இல்லை பலருக்கு. அவற்றை ஆரியன் நன்றாகச் சுரண்டி எடுத்து விட்டான்; துளிக்கூட இல்லை. இதைப்பற்றி ஏதாவது நாம் சொன்னால், உண்மையிலேயே சினம் மூளவேண்டியதற்கு மாறாகச் சிரித்து மழுப்புகிறார்கள்.

இன்னொன்று, An advance history of India என்று ஒரு நூல் எழுதி வெளியிட்டிருக்கின்றார்கள். அந்த நீலகண்டசாத்திரியாரும். வி. என் சீனிவாசாச்சாரியார் என்பவரும் சேர்ந்து எழுதிய நூல் அது. அஃது ஓரளவு பெரிய நூல். இருபத்தைந்து உருபா விலை. அதிலேயும் தமிழர்களைத்