|
இருக்கும். இங்குப் போல் நான்கு
நிலங்களும் அடுத்தடுத்து அமைந்த நிலப்பகுதியே
உலகத்தில் இல்லை. முதன் முதல் குறிஞ்சி
நிலத்தில்தான் மாந்தன் தோன்றியிருக்க
வேண்டும். அங்கிருந்து அவன் முல்லைக்கு வந்திருக்க
வேண்டும்; அதற்கடுத்தாற்போல் மருதம் இருக்கிறது
அதற்கும் அடுத்தாற்போல் கடல். அது நெய்தல் ஆகி
விடுகிறது. இப் பொழுது எண்ணிப் பார்த்தால்,
மேற்குத்தொடர்ச்சி மலையை அடுத்துக் காவிரி,
வையை முதலியவற்றையும், குமரிமலையையடுத்துக்
குமரியாறு, பஃறுளியாறு முதலியவற்றையும், எடுத்துக்
கொண்டால், அவற்றை அடுத்து அந்த நால்வகை நில
அமைப்புகளும் உள்ளதை நாம் நன்றாக அறிந்து
கொள்ளலாம். இவற்றையெல்லாம் விரிவாக எழுதி
அந்தக் கருத்தை வலியுறுத்தியிருக்கின்றார்.
அடுத்து, சிலர் சொல்லுகிறார்கள்,
இந்த மொகஞ்சதோரா நாகரிகத்தை ஒத்திருக்கிறது
சுமேரிய நாகரிகம், என்று. அந்தக் கருத்தை மிகவும்
நன்றாக விளக்கி இராமச்சந்திர தீட்சிதர்
அவர்களும் எழுதியிருக்கிறார்கள். "இங்கிருந்து
போன தமிழர்தாம் சுமேரிய நாகரிகத்தைப்
பரப்பினார்கள்" என்பது அவர் கருத்து.
பாபிலோனிய நாகரிகம், சுமேரிய நாகரிகம்
என்பவையெல்லாம் பழைமையானவை என்று
சொல்லுகிறார்களே, அங்கு ஊர் என்று ஒரு நகர்
இருந்தது. அந்த ஊர் என்னும் பெயருடைய ஊரில்
அகழ்ந்தெடுக்கப் பெற்ற ஒரு தேக்கு மரம் நம்
சேரநாட்டிலிருந்து கொண்டு போனதாகக்
கண்டுபிடித்திருக்கிறார்கள். மேலும் பைபிள்
என்னும் திருப்பொத்த கத்தில் சொல்லப்
பெற்றிருக்கின்றவனும் யூதர்களுக்கு முந்தியவனும்
ஆன ஆபிரகாம் என்பவன் பெயரில் உள்ள ஆப்
என்னும் சொல் லுக்குத் தந்தை என்று பொருள்.
அந்த மொழியிலும் ஆப்-அப்பு என்னும் சொற்கள்
தந்தையை அஃதாவது அப்பனைக் குறிக்கும்.
அப்பன் என்னும் சொல் தூய தமிழ்ச்சொல் என்று
சொல்லவேண்டிய தில்லை. உண்மை இப்படியெல்லாம்
இருக்கிறது.
இனிமேல் நாம் என்ன செய்ய
வேண்டுமென்றால். வரலாற்றுத் துறை, கல்வெட்டுத்
துறை, பழம் பொருட்கலைத் துறை இந்த மூன்று
துறைகளிலும் துறைத் தலைவர்களாகவோ,
ஆசிரியர்களாகவோ தன்மானமுள்ள தமிழர்தாம்
இருக்கவேண்டும். இல்லாவிட்டால் ஒரு பொழுதும்
தமிழும் வளராது; தமிழனும் முன்னேறமாட்டான்.
மதுரைப் பல்கலைக்கழகமாயினும் சரி; சென்னைப்
பல்கலைக் கழகமாயினும் சரி. இப்படித்தான் இருக்க
வேண்டும். இருக்கும்படி நாம் செய்ய வேண்டும். இனி
இத்தகைய (சுப்பிரமணியம் போன்றவர்கள் எழுதிய
நூல் போன்ற) வரலாற்று நூல்களை யெல்லாம்
வகுப்பில் பாடப் பொத்தகமாகப் படிக்கக் கூடாது.
தமிழைப் பற்றியோ தமிழனைப் பற்றியோ
வரலாற்றுப் பொத்தகத்தில் தவறாக
எழுதியிருந்ததால் உடனே மாணவர்கள் வகுப்பை விட்டு
வெளியேறிவிட வேண்டும். சரியான வரலாறுகள்
எழுதப்பெற்றால்தான் அவற்றை வகுப்பில்
|