''தன்னூன் பெருக்கற்குத் தான்பிறி
தூனுண்பான் எங்ஙனம் ஆளும்
அருள்.'' (குறள்.
251)
என்னுங் குறள்களாலும், 'அருளுடைமை,'
'புலான் மறுத்தல்,' 'கொல் லாமை' என்னும் அறங்களை வள்ளுவர் துறவறவியலில் வைத்து
வற்புறுத்துவதாலும், துறவறத்தின் இயல்பாலும், அந்தணர் என்னும் பெயர் துறவியர்க்கே
பொருந்தும் என்பது தேற்றம்.
தொல்காப்பியர், துறவியரை அந்தணர்
அறிவர் ஐயர் தாபதர் என்னும் சொற்களாலும், கல்வித் தொழிலால் அவரோ
டொருமருங்கொப் புடைய இல்லறத்தாரைப் பார்ப்பார் என்னும் சொல்லாலும் வேறுபடுத்திக்
காட்டுவது கவனிக்கத்தக்கது.
''நூலே கரகம் முக்கோல்
மணையே ஆயுங் காலை அந்தணர்க்
குரிய'' (1570)
எனத் தொல்காப்பியர் கூறும் அந்தணர் சின்னங்களே, அவர்
துறவியரைச் சுட்டிக் கூறியமையை யுணர்த்தும்.
அந்தணர் என்னும் பெயர் இவ்வாறு
துறவியர்க்கே யுரியதாயினும் பொருளிலக்கணத்தின் பொருட்டுப் பல்வேறு
தொழில்களையும் கல்வி போர் வணிகம் கைத்தொழில் என்னும் நால்வகையுள் அடக்கி
எல்லாக் குலங்களையும் நாற்பாற்படுத்துக் கூறும்போது.
''ஒருபெயர்ப் பொதுச்சொல் உள்பொரு
ளொழியத் தெரிபுவேறு கிளத்தல் தலைமையும்
பன்மையும் உயர்திணை மருங்கினும் அஃறிணை
மருங்கினும்,''
(தொல். 532)
என்னும் விதிப்படி
உவச்சர், பூசாரியர், தேவராளர்,
குருக்கள், பண்டாரவர், புலவர், கணக்காயர், கணியர், வள்ளுவர், பார்ப்பார் முதலிய
பல்திறக் கல்வித் தொழிலாளரும் அந்தணர் என்னும் தலைமைச் சொல்லாற்
குறிக்கப் பெறுவர், அல்லது அந்தணருள் அடக்கப் பெறுவர். (இங்குக் குறிக்கப் பெற்றா
ரெல்லாருந் தமிழ்க் குலத்தாரே). இதனால், அந்தணர் என்னும் பெயர் சிறுபான்மை
இல்லறத்தாரான கல்வித் தொழிலாளரையுங் குறிக்கும். இங்ஙனங் குறிப்பது நூல் (செய்யுள்)
வழக்கேயன்றி உலக வழக்கன்று.
ஆரிய இனத்தைச் சேர்ந்த பிராமணர்
தென்னாடு (தமிழகம்) வந்து குடியேறியபோது, அவருள் துறவு அல்லது துறவொத்த
நிலையிலுள்ளார் அந்தணர் என்றும், இல்லறத்தார் பார்ப்பா ரென்றும்,
நிலையொப்புமையும் தொழிலொப்புமையும் பற்றி அழைக்கப்பட்டார். பின்பு, இனவொருமை
யாலும் ஆரிய வருணாசிரம தருமம் பற்றிய குலப்பிரிவினையாலும், இரு சார்
பிராமணரும் ஒரு சாரராகி, அந்தணர் பார்ப்பார் என நூல்
வழக்கிலும், |