பண்டாரகர் (Dr.) உ. வே. சா. அவர்கள், தங்கள்
புறநானூற்றுப் பதிப்பில், பாடப்பட்டோர் வரலாற்றில் ''சேரமான் பெருஞ்சோற்று
உதியஞ் சேரலாதன்: இவன், பாரதப்போரில் பாண்டவர் துரியோத னாதியரென்னும் இரு
வகையார் சேனைக்கும் உணவளித்தான். இவ் வரலாற்றை,
''ஓரைவ ரீரைம் பதின்ம ருடன்றெழுந்த போரில்
பெருஞ்சோறு போற்றாது தானளித்த சேரன் பொறையன் மலையன்
றிறம்பாடிக் கார்செய் குழலாட வாடாமோ வூசல் கடம்பெறிந்த வாபாடி யாடாமோ
வூசல்'' (சிலப். வாழ்த்து. 25)
என்னும் சிலப்பதிகார வாழ்த்துக் காதைச் செய்யுளும்
நன்கு புலப்படுத்தும். இதனாலேயே இவன் இப் பெயர் பெற்றான். இவனைப் பாடிய புலவர்
முரஞ்சியூர் முடிநாகராயர், என வரைந்திருப்பதையேனும் நண்பர் கண்டு
தெளிக.
குமணன் தலைகொடுக்கத் துணிந்ததும், கண்ணப்பன்
கண்ணிடந் தப்பியதும். இயற்பகை நாயனார் மனைவியை அளித்ததும், சிறுத்தொண்டர்
மகவரிந் தூட்டியதும், வேறெங்கேனும் கண்டதுங் கேட்டதும் உண்டோ? ஆயினும், அவை
உண்மையன்றோ!
12. நண்பரது 6ஆம் ஐயவினா 4ஆம் ஐயவினாவின்
மறுகூற்றே. இது நண்பரின் மனக்கலக்கத்தையே மறுசாய லிடுகின்றது.
13. முடிநாகராயர் புறச் செய்யுள் பெருஞ்சோற் றுதியஞ்
சேரலாதன் பாரதப் படைகட்குச் சோறு வழங்கியதைப் பற்றியதாயின், அதற்கும் கடைக்
கழகக் காலத்திற்கும் இடைப்பட்ட செய்யுள்களெல்லாம் எங்கேயென்று, திரு.வையாபுரிப்
பிள்ளையவர்கள் மனப்பான்மையுடன் விளவுகின்றார் நண்பர்.
''ஏரண முருவம் யோகம் இசைகணக் கிரதஞ்
சாலம் தாரண மறமே சந்தந் தம்பநீர் நிலமு லோகம் மாரணம் பொருளென் றின்ன
மானநூல் யாவும் வாரி வாரணங் கொண்ட தந்தோ வழிவழிப் பெயரு மாள''
என்னும் பழஞ் செய்யுளே இதற்குத் தக்க விடை. பல
நூல்களுஞ் செய்யுள் களும், தமிழ்ப் பகைவரால்
அழிக்கப்பட்டும்விட்டன.
அழிந்துபோன தமிழ்நூல்களைப்பற்றிச் செந்தமிழ்ச்
செல்வியில் தொடர்ந்து அழகாக எழுதிவந்த நண்பர், தாமே தம் கூற்றை மறுப்பது
மிகமிக வருந்தத்தக்கது. இதற்கொரு காரணமு மிருக்கலாம்.
இக் காலத்தில், உண்மையான தமிழ்ப் புலவர்க்கு
வழங்கும் வள்ளல் ஒருவருமில்லை, காட்டிக் கொடுக்கும் கொண்டான்கட்கு வாரிக்கொடுக்கும்
கொடைமடமே மிகுந்துள்ளது. கடந்த மூவாயிரம் ஆண்டுகளாக நலிந்தும் |