அரசாங்கம் ஆத்திரமுற்று மன்றத்தைக் கலைத்துப் பொதுத் தேர்தல் நடத்திற்று. அடுத்த சில ஆண்டுகளில் அரசாங்க ஆதரவுடன் பொது அவை பெருமக்கள் அவையின் இம்மறுப்புரிமையை ஒழிக்கவேண்டும் என்று கச்சை கட்டிப் போராடிற்று. 1919-ல் ஒரு வகையான இடைநிலைத் தீர்ப்பு ஏற்பட்டது. பொதுஅவையின் திட்ட மெதனையும் பெருமக்கள் அவை மறுத்தாலும் அது பொது அவையில் மூன்று தடவை தொடர்ந்து நிறைவேற்றப்பட்டால் அது பெருமக்கள் இணக்கம் பெறாமலே சட்டமாய் விடும் என்று வரையறை செய்யப்பட்டது. இதே ஆண்டில் மன்றத்தின் கால எல்லை 7-ஆண்டிலிருந்து 5-ஆண்டுகளாகக் குறைக்கப்பட்டது. மன்ற உறுப்பினருக்கு ஆண்டுக்கு 400 பொன் ஊதியம் தருவதென்றும் உறுதிப்பட்டது. 1912-ல் அயர்லாந்து இரு அவைகளுடைய தனி மன்றம் பெற்றுப் பிரிட்டிஷ் அரசியலமைப்பிலிருந்து விலகி நின்றது. முதல் உலகப்போர் முடிவில் மாதர் மொழி உரிமைப் போராட்டத்தில் முனைந்து சலியா முயற்சியுடன் போராடினர். 1918-ல் நிறைவேறிய சீர்திருத்தச் சட்டம் பெண்களில் 30 ஆண்டுக்கு மேற்பட்ட அனைவருக்கும் மொழி உரிமை தந்ததுடன் வீடுடையவர்கள் வீட்டில் தங்கியிருக்க வேண்டும் கால எல்லையைக் குறைத்தும், கப்பலோட்டிகள், போர்வீரர்கள் ஆகியவர்களுக்கு மொழியுரிமை தந்தும் பத்திரக்காரர் கேட்ட மக்கள் குழு மொழியுரிமையின் பெரும் பகுதியைப் பொதுமக்களுக்கு வழங்கி விட்டது. முதல் உலகப்போரில் பெண்கள் ஆற்றிய தொண்டின் பயனாகவே அவர்களுக்கு இம்மொழியுரிமை வழங்கப்பட்டது. 1912-முதல் தனி |