பக்கம் எண் :

106குடியாட்சி

யாட்சி யுரிமை பெற்ற அயர்லாந்தில் வடபகுதியிலுள்ள அல்ஸ்டர் மாவட்டத்துச் சீர்திருத்தச் சமயத்தவர்கள் (Protestants) கத்தோலிக்கர்களான அயர்லாந்து மக்கள் ஆட்சியிலிருக்க விரும்பாமல் அதனை எதிர்த்தனர். அதன் பயனாய் 1920-ல் அயர்லாந்து இரண்டு அரசுகளாக ஆக்கப்பட்டு இரண்டு மன்றங்கள் அமைக்கப் பெற்றன.

   1924-ம் ஆண்டுச் சட்டம் 30-ஆண்டுக்கு மேற்பட்ட ஆங்கில நாட்டு ஆடவர் பெண்டிர் அனைவர்க்கும் (உறுப்புக் குறை யுடையவர், பித்தர், குற்றவாளிகள் ஆகியவர்கள் நீங்கலாக) மொழியுரிமை தந்தது. இத்துடன் 1848ல் பத்திரக்காரர் கோரிய முனைப்பு மிக்க சீ்ர்திருத்தங்கள் அனைத்துமே பெரும்பாலும் வழங்கப்பட்டு விட்டன என்று கூறலாம்.

   இன்று பிரிட்டிஷ் அரசியல் மன்றின் பொதுஅவை கிட்டத் தட்ட 600 உறுப்பினர்களை யுடைய பேரவையாகும். அதில் 30 பேர் வெல்ஸ் நாட்டுப் பெயராட்கள்; 72 ஸ்க்காட்லாந்தின் பெயராட்கள். அயர்லாந்து உட்பட்டிருந்த போது அதன் சார்பில் 103 உறுப்பினர் இருந்தனர். பெருமக்கள் அவையிலும் 620 உறுப்பினர் உண்டு அதில் அரச குடும்பத்துக் கோமக்கள் இளவரசிகள் (Dukes, Duchesses) கோமான்கள ் (Marquesses) இளங்கோக்கள் (Earls Viscounts) பெருமக்கள் (barons) வழக்கு மன்றத் தலைவரான நிறை வாழ்நாட்டின் பெருமக்கள் (Life peers) தலைமக்கள் (bishops) ஆகியவர் இருப்பர். கலைமக்கள் மூன்றாம் எட்வர்டு காலத்தில் மிகுதி. ஆனால் தலைப் பெருமக்கள் இருவர் (Archbishop of Youth and canterbury) நீங்கலாக இப்போது 24 தலைமக்களே இடம் பெற்றுள்ளனர்.