பேரறிஞர் மார்க்ஸ் என்பவர் தோற்றுவித்த வாழ்வியல் ஒப்பு நெறி (Socialism) இம் முனைத்த கருத்தை அடிப்படையாகக்கொண்டு வளர்ச்சி யடைந்து உருசிய நாட்டில் (Russia) பொது உடைமைக் கட்சியாகக் காய்த்துப் பொது உடைமை அரசாங்கமாகத் கனிந்துள்ளது. இவ் உருசிய நாடு ஒன்று நீங்கலாக வேறெந்த நாடும் பிரிட்டனளவு தன் முயற்சியால் அரசியல் முன்னேற்றத்தில் தொடர்ந்து மேம்பட்டதில்லை என்பதைக் காணலாம். மற்ற நாடுகளின் அரசியல் வளர்ச்சி முறைகளை வரும் பிரிவுகளில் காண்போம். 6. அமெரிக்க நாட்டு அரசியல் வளர்ச்சி அமெரிக்க நாட்டு வாழ்வியல் பண்புகளும் நாகரிகமும் வரலாற்று முறைப்படி பார்த்தால் பிரிட்டன் வாழ்வு, நாகரிகம் ஆகியவற்றிலிருந்து பிறந்து வளர்ந்த கிளைகளேயாகும். ஆனால் அந் நாகரிகம் முற்றிலும் கிளை நாகரிகம் அன்று. அமெரிக்க நாட்டில் குடியேறியவர்கள் பெரும்பாலும் ஆங்கிலமொழி பேசுபவரே யாயினும் சிறிதும் பெரிதுமான பலதொகைப்பட்ட மக்கள் பிற ஐரோப்பிய நாடுகளிலிருந்தும் சென்று அங்கே குடியேறி அவர்களுடன் கலந்ததுண்டு. மேலும் அவர்களுக்கு வடக்கிலுள்ள கானடாக் குடியேற்ற நாட்டில் பெரும்பாலும் பிரஞ்சு மக்களே குடியேறி யிருந்தனர். தெற்கில் மெக்ஸிக்கோ, தென் அமெரிக்க நாடுகளாகிய பிரெஸில் முதலியவற்றிலும் பெரும்பான்மையினராகக் குடியேறிய மக்கள் ஸ்பானிய நாட்டினர் ஆவர். இன்னும் தெற்குக் கோடியில் பல ஐரோப்பிய நாட்டினரும் சென்று |