டியேறியும் நாடமைத்தும் இருந்தனர். ஆங்கிலேயரும் பிரஞ்சுக்காரரும் இத்தாலியரும், ஜெர்மானியரும் இங்கே பல வகையில் விரவியுள்ளனர். மேலும் பல்வேறு நாகரிகப்படிகளிலுள்ள பழங்குடிமக்களாகிய செவ்இந்தியரும் இப்பெருநிலப்பரப்பிலிருந்தனர். அவர்கள் வெள்ளையர் குடியேற்றத்தால் தம் நிலை கெட்டுத் தளர்ந்து அழிந்துகொண்டே வரினும் அண்மையில் ஓரளவு அழிவிலிருந்து பாதுகாக்கப்பட்டும் வருகின்றனர். தவிர, அமெரிக்காவில் எங்கும் இயற்கை வளம் சிறப்புடையதாயிருப்பினும் அங்குள்ள வெப்பம், சதுப்பு நிலங்களின் புழுக்கம், காடுகளின் கொடுநிலைகள் குளிர்சுரம் முதலிய நோய்கள் ஆகியவற்றை எதிர்த்துத் தாங்கித் தாமே உடலுழைப்பை மேற்கொள்ள வெள்ளையர் விரும்ப வில்லை. எனவே அவ்வகைக்காக அவர்கள் நீக்ரோவர் முதலிய கருப்பு மக்களே அடிமைகளாகக் கொண்டுசென்று அவர்கள் மூலமே நாட்டை வளப்படத்தலாயினர். இத்தகைய வேறு வேறு வகைப்பட்ட மக்கள் கலவைகளுக்கிடையில் வாழ்ந்த அமெரிக்க நாகரிகமும் வாழ்க்கைப் பண்பும் தனி வாழ்வு வாழ்ந்த ஆங்கிலேயரிடமிருந்து வேறுபடுதல் இயற்கையேயன்றோ? மேலும் இங்கிலாந்திலிருந்தும் பிற வெள்ளையர் நாடுகளிலிருந்தும் அமெரிக்கா சென்றவர்கள் அந்நாடுகளில் இன்பவாழ்வு வாழ்ந்த உயர் குடி மக்களோ செல்வரோ அல்லர். பெரும்பாலும் அவர்கள் வறுமைக் கொடுமைக் கஞ்சி ஓடியவர்களும் 16-17-ம் நூற்றாண்டுகளின் ஏற்பட்டிருந்த ஐரோப்பிய அரசியலாரின் சமயச் சார்பான அடக்குமுறைகளிலிருந்து தப்பி ஓடியவர்களுள் |