பேரவாவால் உந்தப் பட்டுப் பெரும்பொருள் திரட்டும் ஆர்வங்கொண்டு சென்ற ஊக்கமிக்க இளைஞருமே யாவர். எனவே அவர்களின் புதிய வாழ்வில் இப்பொருளார்வமும் சமய விடுதலையார்வமும் வகுப்பு வேற்றுமைகளுக்குப் பணியாத சமநிலை யார்வமும் குடி கொண்டிருந்தன. 18-ம் நூற்றாண்டின் கைத்தொழில் புரட்சியால் பல்வகைப் பொறிகளின் மூலம் பொருள்களின் பெருக்கத்தை மிகுதிப் படுத்திய பிரிட்டன் அப்பொருள்களை விற்கும் விற்பனையிடமாகத் தன் குடியேற்ற நாடுகளை நடத்தத் தொடங்கிற்று. அப்போது அமெரிக்கக் குடியேற்றப் பகுதகிள் ஆங்கில ஆட்சியை மீறி யெழுந்தன. ஏரும் கலப்பையும் கைக் கொண்ட உழவர்கள் திடுமென வாளும் துப்பாக்கியும் கைக்கொண்ட போர்வீரராக மாறித் தம் நாட்டு விடுதலைக்கான படையாகத் திரண்டனர். உழவருள் உழவராயிருந்த ஜார்ஜ் வாஷிங்டன் என்பவர் அவர்களைத் திறம்படப் பயிற்றுவித்து ஆங்கிலேயரை எதிர்த்துப் போர் நடத்தி வெற்றி கண்டனர். பழம் பெரு நாடுகளிலொன்றும் வல்லரசுகளில் ஒன்றுமாகிய பிரிட்டனை வரலாற்றில் ஒரு நூற்றாண்டளவே வளர்ச்சியுடைய தம் நாடு எதிர்த்து வென்றது என்ற புத்தார்வம் அவர்கள் உள்ளார்ந்த பண்புகளை ஊக்கி அவர்களைத் தமக்கென ஓர் அரசியலையும் வகுக்கும் படி தூண்டிற்று. இதற்கேற்ப அவர்கள் முதல் தலைவரான வாஷிங்டன் அரிய படைத்தலைவராயிருந்ததுடன் அமையாமல் அரிய அரசியல் அமைப்பாளராகவும் மாறி 1787-ல் அமெரிக்க விடுதலை விளம்பரம் என்ற பேருரிமை தாளை வெளியிட்டார். அமெரிக்க நாடுகளின் |