தனி அரசியலின் தலைவர் அங்கும் பெரும்பாலும் அரசியல் மன்றில் இரண்டு அவைகள் இருந்தன. நாளடைவில் எல்லா அரசுகளிலுமே இரண்டு அவைகள் அமைந்தன. முதலில் இரண்டு அவைகள் ஏற்பட்டது ஆங்கில நாட்டு அரசியல் மரபைப் பின்பற்றியேயாகும். ஆயினும் அவை தனிப்பட்ட முறையில் அமெரிக்க நலன்களுக்கு உகந்தவையாக மாறுபட்டு அமைந்தன. சிறிதும் பெரிதும் ஆன பல அரசியல்கள் சேர்ந்த கூட்டு அரசியல் ஏற்படுத்துவதில் அவர்களுக்கு ஏற்பட்ட ஒரு சிக்கலை இப்புது அமைப்புத் தீர்த்துவைத்தது. ஒவ்வோர் அரசியலும் தான் சிறியதாயினும் பெரிய அரசியலுக் கொப்பாகப் பெயராண்மை பெற்றால்தான் பாதுகாப்பு நிலை இருக்கும் என்று எண்ணப்பட்டது. அதே சமயம் பொது அரசியளில் மக்கள் தொகைக்கேற்ற பெயராண்மை இருப்பதும் இன்றியமையாததெனக் கருதப்பட்டது. அரசியல் மன்றில் இரண்டு அவைகள் இருந்ததனால் இரண்டு முறைகளையும் பின்பற்ற முடிந்தது. அரசியல் மன்றின் கீழவை (பெயராளர் அவை) மக்கள் தொகுதிக்கேற்ற பெயராண்மை உடையதாயிருந்தது. மேலவையோ அரசியல்கள் ஒவ்வொன்றுக்கும் ஒரே நிலைப் பெயராண்மையுடையதாயிற்று. கூட்டுறவில் படிப்படியாக வந்து சேர்ந்த அரசுகள் 30, ஒவ்வொன்றுக்கும் 2 ஆட் பெயர்கள் வீதம் மேலவையில் 16 உறுப்பினர் இருந்தனர். 1 Governor 2 House Representatives 3 Senate |