பிரிட்டனின் அரசியல் மன்றையும் அமெரிக்க அரசியல் மன்றையும் பார்ப்பவர்களுக்குக் கட்டட அமைப்பிலும் உறுப்பினர் இருக்கும் முறையிலும் நடை முறையிலும் காணப்படும் வேற்றுமைகள் எண்ணற்றவை. இங்கிலாந்தின் அவைக் கட்டடம் உறுப்பினர் தொகைகளை நோக்க மிகச் சிறிது. எனவே இடவமைப்பும் குறைவு. அமைச்சர்கள், எழுத்தாளர், படியாளர் தவிர மற்றவர்கள் நெருக்கமாய் வரிசை வரிசையாக அடுக்கி அமைந்த விசிப் பலகைகளில் (benches) தான் உட்கார்ந்திருப்பர். இவைகள் பெரும்பாலும் அவையின் நடு இடைவழிக்கு (Corridor) இருபுறமும் எதிரெதிராக அடுக்கப்பட்டிருக்கும். அரசாங்கத்தில் பணியேற்று நடத்தும் கட்சியினர் வலப்புறமும் அவர்களை எதி்ர்ப்பவர் இடப்புறமும் வீற்றிருப்பர். இவற்றுக்கப்பால் கண்காட்சிக்காகவரும் விருந்தினரின் மாடிப் படிகள் (Visitors Gallery) ஒன்று அமைந்துள்ளது. பொருளாண்மை இருக்கை என்ற தலைமையிடத்திலேயே தத்தம்மேடைப் பலகையுடன் அமைச்சர்கள் இருப்பர். எல்லாவற்றிற்கும் தலைமையில் தாழ்ந்த மேடைப் பலகையில் மன்ற எழுத்தாளரும் அவருக்குப் பின் உயர்ந்த மேடைப் பலகையின் எதிரில் அவைத் தலைவரும் வீற்றிருப்பர். அமெரிக்க அவையின் நிலை இவை யனைத்திற்கும் மாறானது. இருக்கைகள் எதிரெதிராக வன்றி ஒரே வட்டமாக இருக்கும். கட்சிகள் அரசாங்கக் கட்சி எதிர் கட்சி என்று பிரியாமல் சிதறியும், உறுப்பினர் ஒருவருக்கொருவர் எதிராக இராமல் பரந்தும் இருப்பர். பொருளாளர் மேடை போன்ற எதுவுமில்லை. அமைச்சரோ முதலமைச்சர் நிலையில் ஒரு நாட்டுத் தலைவரோ Treasury Bench |