பக்கம் எண் :

118குடியாட்சி

அவை எதிலும் வந்தமர்வதேயில்லை. அமரவும் கூடாது. ஏனெனில் இங்கிலாந்திலிருப்பது போல் அவரோ அமைச்சரோ அவை உறுப்பினரல்லர். இங்கிலாந்தில் அவை சிறிய இடத்தில் அமைந்திருப்பதால் ஒருவரோடொருவர் வாதிடவோ அமளி செய்யவோ இடமுண்டு. எனவே அது அரசியல் அவை மட்டுமன்று; வாத அவை கூட. ஆனால் அமெரிக்க அவையில் ஒருவர் பேசுவதை ஒருவர் ஒலி பெருக்கியின்றிக் கேட்க முடியாது. வாதம் உரையாடல் ஆகியவற்றுக்கு இடமில்லை.

   அரசாங்கத்தை நடத்தும் பொறுப்புடைய தலைவரோ அமைச்சரோ அமெரிக்காவில் அவைக்கு வரவும் முடியாது; சட்டங்கள் கொண்டு வரவும் முடியாது. அவற்றின் பகர்ப்பை அவைத் தலைவருக்கு அனுப்புவதுடன் அவர்கள் வேலை முடிந்துவிடும். அவையார் ஏற்கின்றனரா? என்று பார்க்கவோ, அதனை ஆதரித்துப் பேசவோ, கண்டனங்களுக்கு மறுமொழி கூறவோ அவர்களால் முடியாது. உண்மையில் மன்ற அவை கூட அச்சட்டங்களைப் பற்றி மிகுதியும் வாதிப்பதில்லை. அதனை உருவாக்க உதவுவதுமில்லை. அதனை உருவாக்கப் பல கழகங்களும் (Committees) துணைக் கழகங்களும் (Sub-Committees) பாடுபடும். இவற்றில் பல தடவை ஆராயப்பட்ட பின்பே மன்ற அவைகளில் அவை கொண்டுவரப்படும், மன்ற அவை ஏற்கா விட்டால் அது திருத்தி அமைக்கப்படுவதில்லை. புதிதாக மீண்டும் கொண்டு வரப்படவேண்டியதுதான்.

   பிரிட்டனில் அன்றாட நடைமுறைச் செய்திகள் ஒருகாலத்தில் தனி உறுப்பினரால் மன்ற அவையில் கொண்டுவரப்பட்டன. இப்போதும் அவ்வப்போது