அவை வருவதுண்டு. ஆனால் பெரும்பாலும் அவை அந்தந்த அரசியல் துறையின் பணியாளர் கையிலேயே ஒப்படைக்கப்படுகின்றன. அரசியல் நடைமுறைத் தலைவர் ஆகிய முதலமைச்சர் மன்றின் பெரும்பான்மைக் கட்சி ஆதரவு பெற்றவராதலால் அவரே அவற்றின் பொறுப்பை ஏற்று நடத்துகின்றனர். ஆனால் அமெரிக்காவில் ஒவ்வொரு சிறு நடைமுறை ஒழுங்குக்கும் தலைவர் அரசியல் மன்றத்தை எதிர்பார்த்தே யாகவேண்டும். மொத்தமாகப் பார்த்தால் பிரிட்டன் அரசியல் நாட்டு வளர்ச்சியுடன் வளர்ந்த ஒரு நாட்டுப் பண்பாய் எழுதி வரையறுக்கப்படாத நிலையில் சிறுபான்மை சட்ட வரம்புகளுக்கும் பெரும்பான்மை எழுதாச் சட்டமாகிய நடைமுறை மரபுகள் அல்லது வழக்கங்களுக்கும் கட்டுப்பட்ட அரசியலாகும். இதனை எழுதப்படா அரசியலமைப்பு என்பர். அமெரிக்காவின் அரசியலமைப்பு இதற்கு மாறாக எழுதப்பட்ட அரசியலமைப்பு ஆகும். அதன் உயிர்நிலைப்பண்புகள் எல்லாம் அரசியலமைப்பின் அடிப்படைச் சட்டமான விடுதலை விளம்பரத்திலேயே அடங்கியுள்ளன. அதிலேற்படும் ஒவ்வொருமாற்றமும் சட்டமூலமே நடைபெறும். அப்புதுச் சட்டங்களும் அரசியல் மன்றால் முதற் சட்டங்களுக்குக் கட்டுப்பட்டே நிறைவேறவேண்டும். எனவே அமெரிக்க அரசியல் மன்றின் உரிமைகள் முந்திய சட்டங்களுக்குக் கட்டுப்பட்டவை. அடிப்படைச் சட்டங்களை அது மாற்றமுடியாது. அரசியலமைப்பில் இன்றியமையாத மாற்றம் வேண்டும் போதும் உடம்படிக்கைகள் வேண்டும் போதும் கூட மேலவையில் மூன்றிலிரண்டு பங்கு உறுப்பினரின் இறுதியிணக்கம் பெறவேண்டும். நடைமுறை அரசியல், மன்ற |