அவைகளுக் கட்டுப்பட்டதன்று. ஆனால் ஆங்கில நாட்டு அரசியல் மன்றம் எல்லையற்ற உரிமையுடையது. அதனைக் கட்டுப்படுத்துவது அதன் மரபும் அதன் விருப்பமுமே தவிர வேறில்லை. ஆங்கில அரசியல் தனி அரசியல்; அமெரிக்க அரசியல் அதன்நாட்டுப் பிரிவுக்கும் வேறுபாடுகளுக்கும் ஏற்ற படி கூட்டு அரசியலாய் அமைந்துள்ளது. ஆங்கில அரசியல் குடியாட்சி, பொறுப்பாட்சி ஆகியவற்றின் உள்ளார்ந்த தன்மைகளுடையதாயினும் வெளித்தோற்றத்திலேனும் முடியாட்சி, வரையறைப்பட்ட முடியாட்சி, குழுவாட்சி, வல்லுநராட்சி ஆகியவற்றின் குறியீடுகளைஉடன்கொண்டு திகழ்வது. அமெரிக்க அரசியல் கலப்பற்ற குடியாட்சி. அமெரிக்க மக்களின் விடுதலையார்வத்தில் சட்டென மலர்ந்த ஓவியமலர் அது; ஆங்கிலநாட்டு மன்றத்தைப்போல அது காலத்தின் போக்கில் மெல்ல முளைத்துக் காழ்த்து இலை தழைத்து, அரும்பி முகிழ்த்து மலர்ந்த வளர்ச்சியும் உயிர்ப்பும் உடைய மலர் அன்று. ஆயினும் அது ஒருவகையில் வாடாது பெரும்பாலும் ஒரே நிலையில் இருக்கும் மலரே. அமெரிக்கர் ஆங்கில அரசியலை அவர்கள் பாராட்டினும், தம் அரசியலே முழுவிடுதலை யார்வ நிறைந்த முழுக் குடியாட்சி எனக் கொள்கின்றனர். அமெரிக்கக் குடியரசில் ஆட்சியுரிமைகள் பெரும்பாலும் இருகூறுகளாய் பிரிக்கப்பட்ட இரட்டை ஆட்சி முறையேயாகும். ஒருகூறு வாழ்வியல் (சமூக) பண்புகளின் மீது ஆட்சி செலுத்துவது. இதுபெரும்பாலும் தனியரசுகளிடமே யுள்ளது. இன்னொருகூறு பொருளியல் வாழ்வுக்கு இன்றியமையாத தந்தி, அஞ்சல், போக்கு |