பக்கம் எண் :

குடியாட்சி121

வரவு, தொழில் அமைப்பு, வெளிநாட்டுத் தொடர்பு, தனியரசியல்கள் தொடர்பு ஆகியவை பற்றியது. இக்கூறு பெரிதும் கூட்டுறவு அரசியலின் பொறுப்பிலுள்ளது. தனி அரசியல்கள் உண்மையில் பேரளவில் தற்சார்பு உடையவை. கூட்டுறவு அரசியல் நேரடியாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிபெயர் மன்றமும் கூட்டுறவுத் தலைவரும் உடையதாயினும் அந்நிலை ஓரளவு மேலவையின் உரிமைகளால் கட்டுப்படுத்தப்படுகிறது. இம்மேலவை அடிப்படைச் சட்டங்களைத் தடுத்து நிறுத்தும் உரிமை உடையது. எல்லா அரசியல்களிலிருந்தும் சரிநிகர் பெயராண்மையுடைய இதன் மூன்றிலிரண்டு பெரும்பான்மை உறுப்பினரின்றி உடம்படிக்கையோ தலைசிறந்த சட்டங்களோ ஏற்படமுடியாது. எனவே ஆங்கிலநாட்டைப்போல் மேலவை அமெரிக்காவில் அரசியலமைப்பின் அணியாக மட்டும் அமையாமல் உண்மையிலேயே தலைமையான உரிமைகள் உடையதாய் விளங்குகிறது.

   ஆங்கிலநாட்டில் அண்மைவரை இரு அரசியல்கட்சிகளே இருந்தன. தற்காலத்தில் மூன்றாவதாக தொழிற் கட்சி ஒன்று முன்னணிக்கு வந்திருக்கிறது. ஆயினும் அரசியலமைப்புவகையில் அரசாங்கக்கட்சி எதிர்க்கட்சி என்ற பாகுபாடு குலையவில்லை. மூன்றாம் கட்சி இரண்டில் எதனுடனாவது நிலவரமாகச் சேர்ந்தோ அவ்வப்போது நிலைமாறியோ அரசியல் வட்டாட்டத்திற்குச் சுவை தருகிறது. அமெரிக்காவில் தொடகத்தில் உண்மையில் கட்சிகளுக் கிடமில்லாமல் பல்வகைக் குழுக்கள் ஏற்பட்டிருந்தன. ஆயினும் நாளடைவில் குடியாட்சிக் கட்சி 1 பொது ஆட்சிக்கட்சி 2 என்னும் இரு கட்சிகள் 


1 Republicans. 2 Democras