பக்கம் எண் :

குடியாட்சி125

   ரஷ்யா முதல் உலகப்போர்வரை டியூட்ா ஆட்சிபோன்ற தன்னாண்மை அரசியலுடனே இருந்து திடுமென ரஷ்யப் புரட்சி மூலம் ஒரு புதிய வகைக் கூட்டுறவு அரசியல் முறையைத் தனக்கென வகுத்துக் கொண்டது. பிரிட்டன் அரசியல் தலைமையை மீறி அதனைத் தாண்டி அரசியலில் புதுத் துறை வகுத்த நாடு இன்று உலகில் ரஷ்யா ஒன்றே. அதனை இன்னொரு பிரிவில் கவனிப்போம்.

   ஆசிய நாடுகளில் பல தன்னாண்மையிழந்து கிடக்கின்றன. வேறு சில வலியிழந்து நிற்கின்றன. மேலை நாடுகளுக்கொப்பாக வளர்ந்துள்ள சப்பான் உண்மையில் டியூடர் ஆட்சி போன்ற தன்னாண்மைமிக்க முடியாட்சியையே இரண்டாம் உலகப் போர் முடிவுவரை கொண்டிருந்தது. ஆயினும் அது வெளி வடிவிலேனும் பிரிட்டனைப் போன்ற அமைச்சர் குழுவும் மன்ற அவைகளும் நடைமுறைகளும் வகுந்துள்ளது. சீனா பத்தொன்பதாம் நூற்றாண்டு வரை பழைய பேரரசர் ஆட்சியிலிருந்து, பின் வெளிநாட்டார் சுரண்டலாலும் தாக்குதலாலும் பேரரசர் வலிமைக்குறைவாலும் சீர் கெட்டது. இந்நிலையில் அறிஞர் சுன்யத் சேனும் அவருக்குப் பின் சியாங்-கை-ஷேக்கும் தோன்றி அதனை ஒரு குடியரசாகச் சீரமைத்து வருகின்றனர். ரஷ்யப் பொதுவுடைமைச்சார்பினர்களும் சீனாவின் ஒரு பகுதியில் தனியாக அரசு நிறுவியுள்ளார்கள்.

   பாரசீக நாடு, ஆப்கனித்தானம் ஆகிய பழைய நாடுகள் முடியரசுகள். அவை பிரிட்டனின் மாதிரியை மேல் போக்காக வேனும் பின்பற்ற முயன்றுள்ளன. துருக்கிப் பேரரசி என்று விடுபட்ட ஈராக் சிரியா முதலிய நாடுகள் இன்னும் பிரிட்டனையோ ஃபிரான்சையோ சார்ந்தே வாழ்கின்றன. இந்தியாவும் அதுபோலவே, துருக்கியோ கமால் பாஷாவின்