ஒப்பற்ற தலைமையின் கீழ் பிரிட்டன் போன்ற நிலையில் குடியரசாய் விட்டது. இனிப் பிரிட்டனை ஓரளவு முன் மாதிரியாகக் கொண்ட ஐரோப்பிய நாடுகளின் அரசியலமைப்புக்களைக் கவனிப்போம். ஃபிரஞ்சுப் புரட்சிக்குப் பின் ஏற்பட்ட ஃபிரஞ்சுக் குடியாட்சியின் புறவடிவம் உண்மையில் பிரிட்டனின் மாதிரியைப் பின்பற்றி எழுந்ததே. ஆங்கில அரசியல் மன்றத்தின் ஒழுங்கு முறைகளை ராமில்லி (Romilly) என்பவர் மொழிபெயர்த்திருந்தார். இம்மொழிபெயர்ப்பை பெந்தமின் தோழராயிருந்த டுமாண்ட் மூலம் பெற்று மிராபோ என்ற அரசியல் தலைவர் அதனைப் புரட்சிக்காலப் பேரவை முன் வைத்தார். அவை ஆங்கில ஓழுங்குமுறை நமக்கேன் என்று அதனைப் புறக்கணித்து விட்டது. ஆயினும் பதினெட்டாம் லூயியின் காலத்தில் மீட்டும் முடியாட்சி ஏற்பட்டபோது இம் மொழிபெயர்ப்பு உபயோகப் படுத்திக் கொள்ளப்பட்டதாம். ஃபிரஞ்சுப் புரட்சிக் காலத்தில் அறிஞர் கற்பனை உலகுகளிடையே கருப்பெற்று மக்கள் உள்ளத்தில் உரம்பெற்று எழுந்த மூன்று அடிப்படைக் கோட்பாடுகள் சரிஒப்பு நிலை, உடன்பிறந்தார் நிலை, தற்சார்பு நிலை ஆகிய மூன்றுமே 2 உண்மையில் (ஜார் அரசர் கால ரஷ்யா நீங்கலாக) வேறெந்த நாட்டையும் விட இப் புரட்சிக் காலத்துக்கு முந்திய ஃபிரான்சில்தான் இம் மூன்றும் மருந்துக்கும் இல்லாத நிலைமையிலிருந்தது. இதனை ஃபிரான்சின் அரசியல் இருட்காலம் அல்லது வல்லாட்சிக் காலம் என்று கூறலாம். இரண்டாம் 2 Equality, Fraternity, Liberty |