பக்கம் எண் :

குடியாட்சி127

பகுதி புரட்சித் தொடக்கமாகிய 1785 முதல் 1875 வரையுள்ள ஆராய்வு நிலைக் காலமாகும். இக்காலத்தில் பல அரசியலமைப்புக்கள் ஒன்றன் பின் ஒன்றாக வந்து கையாளப் பட்டன. அவற்றை அமைத்தவர் ஆங்கில நாட்டு அரசியலிலிருந்து தாம் புனைந்து பெருக்கிய கனாவுலகக் கருத்துக்களை வல்லாட்சிக்கென அமைக்கப்பட்ட அரசியில் சட்டத்தினுள் திணிக்க முயன்று அவர்கள் பெரும்பாலும் தோல்வியே யடைத்தனர். இறுதியில் கனவுகளை யெல்லாம் கைவிட்டுத் தற்காலிகமாக நடைமுறைந் திட்டமாக எல்லாக் கட்சிக்கும் சற்று விட்டுக் கொடுக்கும் ‘அவியல்’திட்டமொன்று கொண்டுவரப் பட்டது. இதனை அமைத்தவர்கள் இதனைத் தற்காலிக முறையாகக் கொண்டு வரினும் இது கிட்டத் தட்ட நிலவரமான அரசியலாய் அமைந்தது. ஏனெனில் இது சமயத்துக்கேற்றபடி வளர்ச்சியும் மாறுபாடும் ஏற்படுவதற்கு இடந்தந்து தொய்வுடையதாயிருந்தது.

   மூன்றாவது காலம் 1875 முதல் இரண்டாம் உலகப் போர் முடிவுவரை. இதனை வளர்ச்சிக்காலம் என்னலாம். 

   புரட்சிக் காலத்தில் மூன்று அமைப்புக்கள் ஏற்பட்டன. முதலது 1789ல் மனித உரிமைகளை வகுத்தது. 1791ல் பொறுப்புடைய அமைச்சர் குழுவும் ஓரவையுடைய மன்றும் அமைத்தது. 1795ல் உடைமைவரைறையுடன் மொழித்தேர்வு நடாத்திக் கூட்டப் பெற்ற ஈரவை மன்றமும் அதனால் தெரிந்தெடுக்கப் பட்ட நடை முறைக்குழுவினர் ஐவரும் அமைந்த மூன்றாம் அரசியலமைப்பு ஏற்பட்டது. 4 ஆண்டுகள் கழியுமுன் 1799ல் நெப்போலியனை முதல்வனாகக் கொண்ட குடியரசு நிறுவப் பட்டது. 1800ல் அரசியல் மன்றின் உரிமைகளைக் குறைத்து நடைமுறை