பக்கம் எண் :

128குடியாட்சி

யாளர் வலிமையை உயர்த்தி நெப்போலியன் தன் தலைமையில் ஆட்சி முறை அமைத்து முடியேற்றுப் பேரரசையும் நிறுவினான்.

   புரட்சிக்காரர் விடுதலைக் கனவு ஃபிரஞ்சு மக்கள் உள்ளத்திலும் அவர்கள் நாட்டு வாழ்விலும் வரலாற்றிலும் எவ்வளவு பதிந்தனவோ அதினும் பன்மடங்கு மிக ஆழமாய் நெப்போலியன் பேரரசுக் கனவுகளும் அவன் ஆட்சி முறைகளும் இராணுவ முறைகளும் பதிந்து வேரூன்றின. அவன் அமைப்புத் திறத்தின் பயனாகப் புரட்சிக் குழப்பத்தால் வலியற்றிருந்த தன்னாட்சி நிலையங்கள் மீட்டும் உயிர்ப்பிக்கப் பெற்று உயர் அரசியலுடன் நன்கு பிணைக்கப் பட்டன. புரட்சிக் காலத்தில் அகற்றப்பட்ட பெருமக்கள் மீட்டும் நிலை நிறுவப் பட்டனர். நாட்டு உரிமைப் படை என்ற மதிப்புக் குழுவும் (Legion of Honour) அமைக்கப் பட்டது. உலகில் நெப்போலியன் ஒப்பற்ற வாள் வீரனாகவே கருதப் படினும் உண்மையில் அவன் ஒப்பற்ற ஆட்சி வீரனும் ஆவன். அவன் வாள் வலிமையால் ஏற்பட்ட அரசு போன பின்னும் அவன் எழுதுகோல் வன்மையால் ஏற்பட்ட நல்லாட்சி முறைகள் இன்றளவும் நிலைத்துள்ளன.

   தோல்வியறியா நெப்போலியன் இறுதிப் போரில் படு வீழ்ச்சியடைந்த பின் 1815 மீட்டும் பழைய பூர்பன் அரசர் முடியேற்றனர். இவர் ஆங்கில நாட்டு முறையைப் பின்பற்ற வீணில் முயன்றனர். இத் தோல்வி மன்னர் திறமின்மையின் பயனே என்று எண்ணி 1830ல் ஆர்லியன்ஸ் மரபில்வந்த இன்னொரு மன்னரைக் கொண்டு இம்முறையை நடத்திப் பார்த்தனர். இதுவும் பயனற்றுப் போயிற்று. 1848-ல் நடைபெற்ற இரண்டாவது புரட்சியின்போது அமெரிக்காவைப் போல பல பகுதிகளின் ஆட்பெயர்களும் வந்து கூடித் தேர்ந்தெடுக்கப்