வெற்றி அரசியல் அமைப்பின் நிறைவினாலன்று, அது வளர்ச்சிக்கு இடம் தரும் முறையில் அமைவதனாலேயே என்று கண்டுகொண்டனர். ஃபிரஞ்சு அரசியலமைப்பு ஒருவகையில் பிரிட்டிஷ் முறைக்கு மாறாய் அமெரிக்கமுறையை ஒத்தது. அது நாளடைவில் வளர்ச்சியடைந்த உருவாயிராமல் ஒரே ஆண்டில் ஒரே மனிதனால் ஏற்பட்ட அடிப்படைமீது எழுந்தது ஆகும். ஆயினும் அது அமெரிக்காவைப்போலவும் முற்றிலும் இல்லை. அமெரிக்காவில் அரசியலமைப்பு ஒரு சட்டத்தை அடிப்படையாகக் கொண்டது. ஃபிரான்சில் அது 3 சட்டங்களை அடிப்படையாகக் கொண்டது. அதனொடு அது அமெரிக்க அரசியலைவிட மிகவும் நெகிழ்ச்சியுமுடையது. அரசியலமைப்பில் மாற்றங்கொண்டு வருதல் இங்கே மிகவும் எளிது இரண்டு அவைகளும் இணைந்த மன்றக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டால் அரசியல் அமைப்பில் எத்தகைய சீர்த்திருத்தமும் செய்யலாகும். ஆயினும் உண்மையில் 1875-க்குப் பின் 3 தடவையே இச்சீர்த்திருத்தம் ஏற்பட்டுள்ளது. இது இவ் அரசியலமைப்பின் உறுதிக்கு ஒரு சான்று ஆகும். ஃபிரான்சில் குடியரசுத் தலைவர் இடம் ஆங்கில மன்னர் இடத்தைப்போன்றே பெரிய மதிப்புக்குரியது. ஆனால் அதைப்போலவே நடைமுறையில் தனிப்பட்ட உரிமைகள் அற்றது. இரண்டு அவைகளும் கூடிய மன்றக் கூட்டத்தில் தனிப்பட்ட பெரும்பான்மை மொழிகள் மூலம் அவர் தேர்ந்தெடுக்கப்படுகிறார். ஃபிரான்சில் இரண்டு அவைகளும் பெரும்பாலும் வேறுவேறு கட்டிடங்களிலேயே கூடுகின்றன மேலவை (Senate) லக்ஸம்பர்க் அரண்மனையிலும் (Palais Luxemburg) ஆட்பெயரவை (Chamber of Deputees) பூர்பன் அரண்மனையிலும் (Palais Bourbon) கூடும். தேர்ந் |