பக்கம் எண் :

குடியாட்சி131

தெடுக்கப்பட்டபின் தலைவர் ஆட்சி ஏழு ஆண்டுகள்வரை செல்லுபடியாகும். அதன் முடிவுக்கு ஒரு திங்களின் முன் தலைவர் இரண்டவைகளையும் கூட்ட வேண்டும். தலைவர் இடம் திடுமென நிரப்பவேண்டிய விடத்தும் அது கூடும்.

   தேர்தல்களில் நிற்கும் கட்சிகள் பலவாதலால் அவை ஒன்றிரண்டு கூட்டுக்கட்சிகளாகச் சேர்ந்து பொதுச் சார்பாக ஆட்களை நிறுத்து. ஒவ்வொரு உறுப்பினரும் பல கட்சிகளுக்கு உகந்தவராயிருக்கவேண்டியவராதலால் கூடிய மட்டும் எல்லாருக்கும் பொதுவான கொள்கைகளையே செயலாற்றுவர். எனவே அரசியலின் போக்கு வெறித்த முற்போக்குடையதாயிருக்கவோ அல்லது செயலார்வமிக்கதாயிருக்கவோ இடமில்லை.

   இங்கிலாந்தைவிட அமெரிக்காவிலும் ஃபிரான்சிலும் மேலவைக்கு ஆற்றல் மிகுதி, ஃபிரஞ்சு மேலவையில் 300 உறுப்பினர் உண்டு. இவர்கள் 9 ஆண்டுக்காலத்திற்குத் தேர்ந்தெடுக்கப்படுவர். தேர்தலும் ஆட்பெயரவைச் சார்பில் மறைமுகமாகவே நடைபெறும். ஒவ்வோராண்டும் மூன்றிலொருபங்கு உறுப்பினர் நீக்கிப் புதுப்பிக்கப் பெறுவர். இவ்வவை பொருளியல் சார்பான நடைமுறைகளைத் தொடங்கி வைக்க முடியாவிடினும் அவற்றைத் திருத்தவோ அவற்றின் மீது வாதாடவோ கூடும்.

   ஆட்பெயரவையில் உறுப்பினர் தொகை 584. இவர்கள் குடிமக்களிடையே நேரடியாக 4 ஆண்டுக் காலத்துக்குத் தேர்ந்தெடுக்கப்படுவர். அவைக்கட்டிடம் பிரிட்டனி லுள்ளதைவிடப் பெரிதாகவும் நாடகக் கொட்டகைபோல் அமைதி வடிவினதாகவும் இருக்கிறது. பிறைவளைவின் நடுவில் அமைச்சர்களும் இருபுறத்துள் வலதுபுறத்தில் ஆதரிக்கும் கட்சிகளும் இடது புறத்தில் ஆதரிக்காத கட்சிகளும் இருக்கும்.