வளைவெதிரில் மேடைமீது குடியரசுத் தலைவர் இடமும் அதன்பின் எழுத்தாளர் இருக்கைகளும் மேடையின் கீழ் உறுப்பினர்வந்துபேசும் சிறு சாய்மேடையும் இருக்கும். அரசியல் நடைமுறையில் இவ்வமைப்பு இருகட்சி அரசியலைவிட கட்சி இணைப்பு அரசியலுக்கே பெரிதும் உகந்தது. எனவே அரசியல் மாற்றம் ஏற்படும்போது பெரும்பாலும் எந்த அமைச்சர் குழுவும் முற்றிலும் மாறுவதில்லை. ஆதரவு கைவிட்ட கட்சியினிடமாக வேறு கட்சி ஆட்கள் சேர அது மீட்டும் திருத்தியமைக்கப்பபடுவதே பெரும்பான்மை நிகழ்ச்கியாகும். மன்று நடைமுறையில் பிரிட்டனைப்போல வாதங்கள் இரா. ஆனால் உறுப்பினர்கள் நடுவில்வந்து வாசிப்பதனால் திருத்தமாக எழுதப்பட்ட இலக்கிய நிறைவுடைய பேருரைகளுக்கு ஃபிரான்ஸில் இடமுண்டு. ஃபிரான்சில் அரசியல் தலைவர் எளிதில் நீக்கப்பட முடியது. அவர்நிலை பிரிட்டிஷ் அரசர் நிலைபோன்றது. ஆனால் அமைச்சர்களை நம்பிக்கையில்லாத் தீர்மான மூலம் அகற்றலாம். இவ் அமைச்சர் பொறுப்புப் பிரிட்டனைப் பின்பற்றி அமைந்ததேயாகும். இங்ஙனம் பலவகையில் பிரிட்டனைப் பின்பற்றியதாயினும் பிரஞ்சு அரசியல் 19-ம் நூற்றாண்டில் ஐரோப்பாவின் அரசியல் ஆய்வுக்களமாயமைந்தது. 20-ம் நூற்றாண்டில் ரஷ்யா இந்நிலையை உடையதாயிற்று. ஃபிரான்சுக்குப் பலவகையில் மாறுபட்ட நாடு செர்மனி ஃபிரான்சைப்போலவே இங்கும் பெருநிலக் கிழமைமுறையும் (Feudalism) அதன்மீது உரோமகாலப் பேரரசு முறையும் அமைந்திருந்தன. ஆனால் ஃபிரான்சைப்போல் பெருநிலக் கிழமைகள் ஒரு நாடாக ஒன்றுபடாமல் பல அரசியல்களாகப் |