பிரிந்து இயன்றன. ஆயினும் அந்நாட்டுப் பேரரசர் தம் ஆட்சியையே உரோமர் பேரரசின் வழித்தோன்றல் எனக்கொண்டு அதனைத் ‘தெய்விக உரோமப்பேராசு’ என்று கூறி வந்தனர். அறிஞர் வால்த்தேர் நகைச்சுவையுடன் அது தெய்விகமுமல்ல உரோமச் சார்பனானதுமல்ல, பேரரசுமல்ல என்று கூறினாராம். இஃது உண்மையே. ஏனெனில் அது தெய்விகத்துக்கு மாறாக உலகியல் அரசே; உரோம நாட்டிற்கு மாறாக செர்மனி நாட்டில் நிலவுவது; இறுதியாக உண்மையில் ஆற்றலுடையதாயிராமையால் அது பேரரசுமன்று. ஆயினும் இச் செர்மன் அரசியல்களில் ஒன்றாகிய பிரஷ்யா படிப்படியாக வளர்ந்து 1710-முதல் 1786-வரை ஆண்ட பிரடரிக் ஆட்சிக்குள் ஐரோப்பாவின் வல்லரசுகளுள் ஒன்றாகத் திகழ்ந்தது. நெப்போலியன் தெய்விக உரோமப் பேரரசைக் குலைத்து அதன் பகுதிகள் பலவற்றை ஃபிரான்சுடன் சேர்த்துத் தானே தெய்விக உரோமப்பேரரசனா முடி சூட்டிக்கொண்டான். ஆனால் அவனுக்குப்பின் ஏற்பட்ட ஃபிரான்சின் சீரழிவில் செர்மனிமீண்டும் தலைதூக்கியதுடன் முன்போல் தளர்ச்சியுற்ற கூட்டுறவாயிராமல் ஒற்றுமைப்படத் தொடங்கிற்று. ஃபிரான்சுப் பிரஷ்யப்போரில் வெற்றிபெற்ற நாடுகளில் ஒன்று என்ற முறையில் பிரஷ்யா 1815-ல் ஏற்பட்ட வியன்னாக் காங்கிரஸ்மூலம் விரிவுபெற்றதுடன் தன்னோடு ஆஸ்ட்ரியாவும் பிரஷ்யாவும் உள்ளிட்டு 37 சிறிதும் பெரிதுமான அரசியல்களை ஒரே கூட்டுறவில் சேர்த்தது. இக்கூட்டுறவை நடத்திய கூட்டுறவு அவை (டியட் அல்லது பண்டு ஸ்டாக்) பல அரசியல்களிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்பெயர்களை உறுப்பினராக உடையது. இக்கூட்டுறவில் பெயரளவில் தலைமைபெற்றது ஆஸ்ட்ரியா. ஆயினும் ஆஸ்ட்ரி |