யாவின் கட்சியும் பிரஷ்யாவின் கட்சியும் கிட்டத்தட்டச் சரி நிகராயிருந்ததால் அது எவ்வகையிலும் உருப்படியான வேலைசெய்ய முடியாமல் போயிற்று. இதற்கிடையில் பிரஷ்யாவிலேயே நாட்டுமக்கள் பொறுப்பாட்சிகோரினர். 1848-ல் அவர்கள் ஃபிராங்க்போர்ட்-ஆ-தி-மெயின் என்ற விடத்தில் தற்காலிக நாட்டுமன்றம் (Congress or Convention of Frankfort-on-the-Maine) கூடிப் பொறுப்புவாய்ந்த ஒற்றுமைப்பட்ட பேரரசு ஒன்று நிறுவமுயன்றனர். ஆயின் அதில் கலந்த அரசியல் புலவர்கள் காலம் நீட்டித்ததால் பிரஷ்ய அரசர் அவர்களைப் புறக்கணித்து அவர்கள் பரந்த மனப்பான்மைக்குச்சற்று விட்டுக்கொடுத்துத். தன் ஆட்சியையும் வலுப்படுத்தி 1850-ல் ஒர் அரசியலை அமைத்தார். இவ்வரசியல் அமைப்பு நலிவுற்றுச் நிலமாற்றுங்களுடன் 1918-வரை நீடித்திருந்தது. செர்மன் அரசியலறிஞருள் சிறந்தவரான பிஸ்மார்க் செர்மனியை ஒரே இனம் மொழி ஆகியவற்றால் இணைக்கப்பட்ட ஒரே கூட்டுறவு அரசியலாக்க விரும்பினார். ஆனால் ஆஸ்ட்ரியா செர்மன் இனமும் மொழியுமே கொண்டதாயினும் பிற இனங்களையும் உட்கொண்டிருந்ததால் போரிட்டாயினும் அதனை விலக்க உறுதி கொண்டார். அதே சமயம் அத்தகைய உறுதியான செர்மன் கூட்டுறவு ஃபிரான்சுக்கு இடையூறு ஆகும் எனக் கருதி மூன்றாம் நெப்போலியன் அதை எதிர்த்தான். சூழ்ச்சித் திறத்தில் மிக்க பிஸ்மார்க் செர்மனியை வட செர்மனி தென் ஜெர்மனி என இரண்டு கூட்டுறவுகளாக்குவதாகக் கூறிக் கொண்டு முதலில் ஆஸ்ட்ரியாவை முறியடித்து விலக்கிவிட்டுப் பின் பிரான்சையும் முறியடித்து 1878-ல் செர்மன் கூட்டுறவுப் பேரரசை நிறுவினார். |