பக்கம் எண் :

138குடியாட்சி

ஒரு பகுதியில் தற்சார்புடைய மன்னராயிருந்த சார்லஸ் ஆல்பர்ட் ஒர் அரசுரிமைத்தாள் வழங்கினார். ஆஸ்ட்ரியா இதனை வெறுத்து அக்கிளர்ச்சியை அடக்க முயன்றது. அது பலதடவை அரசரை நீக்கினும் மக்கள் எழுச்சியை அடக்க முடியவில்லை.

   இத்தாலி நாட்டுத் தலைவரான கவூர் இங்கிலாந்து ஃபிரான்சு ஆகியவற்றின்துனணகொண்டு ஆஸ்ட்ரியாவை முறியடித்துப் பெரும் பகுதி இத்தாலியை ஒன்று படுத்தினார். ஆயினும் இறுதியில் ஃபிரான்சு எதிர் புறம் சேர்ந்து வெனிசை ஆஸ்ட்ரியாவிடம் விட்டுக் கொடுக்க ஒருப்பட்டமு ஆயினும் எல்லாச் சிறு அரசுகளும் எழுந்து காரிபால்டியின் தலைமையில் வெளியார் ஆட்சியை ஒழித்து மன்னர் தலைமையில் ஒற்றுமைப் பட்டன. 1870-ல் இறுதியாக வெனிசும் இத்தாலியக் கூட்டுறவில் சேர்ந்தது.

   இங்ஙனம் பிரஷ்யா தலைமையில் செர்மனி ஆஸ்ட்ரியாவை எதிர்த்து ஒன்று பட்டது போலவே கிட்டத்தட்ட அதே காலத்துக்குள் இத்தாலியும் அதே முறையில் ஒன்று பட்டது. 1848-ல் ஒரு பகுதிக்குத் தரப்பட்ட அரசுரிமைத் தாளே நாடு முழுமையின் அரசியல் அமைப்புக்கும் அடிப்படையாயிற்று. அமைப்பில் மாற்றம் ஏற்படுவதற்குத் தடையில்லாதிருக்கவே பொது முறைச் சட்டங்களாலேயே அது திருத்தியமைக்கப்பட இடமும் ஏற்பட்டது. ஆயினும் 1848 முதல் 1922 வரை மிகுந்த மாற்றமில்லாமலே இவ்வரசியல் ஒழுங்காக நடைபெற்றது.

   இத்தாலிக்கும் செர்மனிக்கும் உள்ள ஒற்றுமை இத்துடன் முடியவில்லை. ஹிட்லர் தோன்றுவதற்குச் சற்று முன்னாகவே இத்தாலியில் 1922-ல் முசோலினி தோன்றி