பக்கம் எண் :

குடியாட்சி139

நாசியருக்குக்கூட முன் மாதிரியாகும் முறையில் பாசிசத்தை வகுத்தார். நாட்டில் பல கட்சிகளிருந்தும் இதுவும் ஹிட்லர் ஆட்சிபோல் வல்லாளர் ஆட்சியாகவே இருந்தது. ஆனால் ஹிட்லருக்கு செர்மனியிலிருந்த அளவு வலிமையோ ஆதரவோ அவருக்கு இத்தாலியிலில்லை. எனவே அவர் வெற்றி முழக்கொலிகள் சற்றுக் குறைந்தபோது எதிர்ப்பை அவரால் சமாளிக்க முடியவில்லை. போரின் இறுதிக் கட்டம் தொடங்குமுன் அவர் ஆட்சி வீழ்ச்சி யடைந்தது. இறுதியில் இங்கும் ஆங்கில ஆட்சி முறையில் அதன் ஆதரவிலேயே அரசியலமைப்பு ஏற்பட்டிருக்கிறது.

   கிழக்கு ஐரோப்பாவில் 20-ம் நூற்றாண்டின் ஆய்வுக்களமாயமந்த ரஷ்யா பற்றி இன்னொரு பிரிவில் விரித்துரைப்போம். பால்கள் தீவக்குறை ஐரோப்பாவிலுள்ள ஒரு சிறிய ஆசியா என்னும்படி அரசியல் வாழ்வில் பிற்பட்டும் பிளவுபட்டும் நலிந்தும் சீர்குலைவு நிலையலேயே என்றும் இருந்துவந்திருக்கிறது. இதன் தென்பகுதியிலுள்ள கிரீஸ் இத்தாலியினும் பழமையான நாடு, ஐரோப்பிய நகரிகத்துக்குத் தாயகமாய் இருந்ததுடன் இத்தாலிக்கும் அது நாகரிக முறையில் ஆசிரியனாயிருந்தது. ஐரோப்பிய மறுமலர்ச்சிக்கும் அது தூண்டுதலாயிருந்தது. ஆயினும் அரசியலில் ரோமர் காலமுதல் அது வர வர வீழ்ச்சி யடைந்து வந்தது. இடைக்காலத்தில் துருக்கிப் பேரரசுக்கு அது அடிமைப் பட்டு முதல் உலகப் போரின் இறுதியில் துருக்கிப் பேரராசு வீழ்ச்சி யடைந்த பின் விடுதலை யடைந்து முடியரசாய் விளங்குகிறது. வெளியுருவில் ஆங்கில அரசியலை ஒத்ததே கிரேக்க அரசியல். இரண்டாம் உலகப் போர்க் காலத்தில் முசோலினி, ஹிட்லத் ஆகியவர் பேராவலுக்கிரையாகி கிரீஸ் நாசி யாட்சியில் சிக்கிற்று. 1945-ல்