பக்கம் எண் :

140குடியாட்சி

மீட்டும் நேச நாட்டின் உதவியுடன் விடுதலை பெற்றும் முன்னணிக் குடியாட்சிக் கட்சியினர், பொது உடமைக்காரர் ஆகியவர் கிளர்ச்சியால் சில காலம் தொல்லைப் பட்டு வருகிறது.

   துருக்கி கமால்பாஷாவின் தலைமையின்கீழ்ப் பழைய உள்ளுரமற்ற பேரரசைத் துறந்து உரமிக்க தனிநாடாய், ஆங்கில அரசியல் போன்ற அமைப்புடைய குடியரசாய் விளங்குகிறது. போலந்து, செக்கொஸ்லாவியா முதலியவை முதல் உலகப்போருக்குப்பின் எழுந்து இரண்டாம் உலகப் போரில் சீரழிந்து மீண்டும் உருவாய்வரும் நாடுகள் போர் புயலிடையே தோன்றிய இந்நாடுகள் அரசியல் நிலவரமடைய நெடுங்காலம் செல்லும் என்றே எதிர்பார்க்காலம்.

   ஐரோப்பாவின் நிலை இதுவாக, ஆசியாவில் துருக்கி நீங்கலாக, சப்பான் ஒன்றுதான் வல்லரசு நிலையிலிருக்கிறது. அது உண்மையில் வல்லாண்மையுடைய முடியாட்சியாயினும் மேனாட்டுமுறைகளை மேலீடாகப் பின்பற்றி ஆங்கிலநாட்டைப்போன்ற பொறுப்பாட்சியின் தோற்றமுடையாதய் விளங்குகிறது. முதலுலகப்போரில் அமெரிக்காபோல் விலகிநின்றும் இறுதியில் ஈடுபட்டும் சப்பான் தன்னை மிகவும் வலுப்படுத்திக்கொண்டது. இரண்டாம் உலகப்போரிலோ ஹிட்லர் முசோலினியின் பேராவலில் பங்குகொண்டு பேரரசு ஒன்றை வென்று நிறுவமுயன்று படுவீழ்ச்சியடைந்தது. அதன் அரசியல் இனி மேனாட்டுமுறையில் குடியரசாகவே அமையக்கூடும்.

   சீனாவில் பழய மஞ்சுப்பேரரசர் ஆட்சி மிகவும் தளர்ச்சியுற்ற ஆட்சியாயிருந்து பிறநாட்டுத் தாக்குதலாலும் நாட்டு மக்கள் கிளர்ச்சியாலும் 19-ம் நூற்றாண்டின் இறுதியில்