பக்கம் எண் :

குடியாட்சி141

அழிவுற்றது. நாட்டில் பல பெருந்தலைவர்கள் தத்தம் படைகளுடன் தலைமை நிலைக்காக நெடுங்காலம் போராடிவந்தனர். அவர்களுள் டாக்டர் சன்யத்சென் என்ற பேரறிஞர் படைவலியுடன் அறிவாற்றலும் உடையவராய் ஒர் அரிய குடியாட்சி முறையையும் வகுத்தார். தொடக்கத்தில் கான்டனில் எழுந்த அவர் கிளர்ச்சி தென்சீனாவெங்கும் பரந்தது. அவருக்குப்பின் அவர் உறவினரான சியாங்கை ஷேக்கிட்டத்தட்டச் சீனாமுழுமையும் ஒரே ஆட்சியின் கீழ்க் கொண்டுவந்தார். ஆனால் சப்பான் உட்புகுந்து முதலில் மஞ்சூரியாவையும் பின் மங்கோலியாவையும் வடசீனாவையும் படிப்படியாகக் கைப்பற்றியது. இரண்டாம் உலகப்போரில் கடல்களை முற்றிலும் சப்பான் கைப்பற்றியதுடன் தெற்கேயுள்ள இந்து சீனா, சீயம், பர்மா ஆகியவற்றையும் கைகொண்டு விட்டதனால் சீனா துண்டிக்கப்பட்டு விட்டது. இதற்கிடையில் வட சீனாவில் யீனான் என்ற பகுதியில் பொது உடைமைக்காரர் தனித்து அரசியலமைத்துப் போட்டியிட்டனர். சப்பான் வீழ்ச்சியின்பின் இவற்றிடையே ஒரளவு கூட்டுறவு ஏற்பட்டு வருகிறது. போரின் தாக்குதலால் சியாங்கின் அரசியலும் வல்லாண்மைத் திறம் குறைந்து பொதுமக்கள் சார்புடையதாகி வருகிறது.

   ஐரோப்பா ஆகிய, கண்டங்களில் இதுகாறும் விவரித்த நாடுகளுக்கு அப்பால் சென்று இன்னும் கவனிக்கவேண்டியன பிரிட்டிஷ் பேரரசின் பகுதிகளான இந்தியாவும் குடியேற்ற நாடுகளும் ரஷ்யாவுமேயாகும். அவற்றை வரும் பிரிவுகளில் ஆராய்வோம்.