ஆராய்ச்சியாலேயே உண்மையில் பெரும்பயனடையக் கூடும். இக்காரணம்பற்றியே உலகின் மற்ற அரசியல்கள் அனைத்தையும் ஆராய்ந்ததன்பின் இன்றைய இந்தியப் பரப்பின் நிலையையும் தமிழக நிலையையும் ஆராயவும், இவற்றை ஆராயுமுன் இறுதியாக ரஷ்ய அரசியலை ஆராயவும் தொடங்கினோம். பிரிட்டன் நீங்கலாகக் பிரிட்டிஷ் பேரரசுப்பகுதகிளைக் குடியேற்ற நிலைநாடுகள் (Dominions) என்றும் குடியேற்றங்கள் (Colonies) என்றும் சார்புநிலைநாடுகள் (Dependencies) என்றும் வகுக்கலாம். முதல் வகையைச் சேர்ந்தவை கானடா, ஆஸ்ட்ரேலியா, தென் ஆபிரிக்கா நியூபவுண்ட்லண்டு, நியூசிலந்து ஆகியவை. இவை சில்லறைச் செய்திகளில் வேறுபடினும் கிட்டத்தட்ட இங்கிலாந்தைப்போலவே பொறுப்பாட்சியும் பொறுப்புவாய்ந்த அமைச்சர் குழுவும் தேர்தலுரிமையுடைய சட்ட சபைகளும் உடையவை. இவை பிரிட்டிஷ் அரசியலமைப்பில் அதன் கொடியையும் முடியாட்சியையும் மட்டுமே ஏற்கின்றன. ஆங்கிலநாட்டாட்சிக்கு வேறு எவ்வகையிலும் அடிமைப்படவில்லை. இரண்டாவது கூட்டத்தில் மேற்கிந்திய தீவுகளும் ஆங்கிலமன்னர் ஆட்சியுட்பட்ட பல சிறு குடியேற்றங்களும் உட்படும் மூன்றாவது கூட்டத்தில் இந்தியாவும் பர்மாவும் மலாயும் உட்படும். இவ்விருவகையிலும் பெயரளவில் சட்ட அவைகள் இருப்பினும் இவை பொறுப்பாட்சியே இல்லாமலோ அல்லது அது முற்றிலும் ஏற்படாமலோ இருந்து வருகின்றன. பிரிட்டனின் முதன் முதல் குடியேற்ற நாடு உண்மையில் அமெரிக்காதான். இந்நாட்டில் தொடக்கத் |