தில் இங்கிலாந்து பொறுப்பாட்சி ஏற்படுத்தாமல் தன் நன்மைக்காக அதன் பொருளியல் நலன்களைப் பயன் படுத்திற்று. அமெரிக்கா இதன் பயனாகவே பிரிட்டனுக் கெதிராக எழுந்து விடுதலை பெற்றுத் தனி நாடாயிற்று. அமெரிக்காவை இழந்த பின் பிரிட்டன் மற்றக் குடியேற்ற நாடுகளில் தன் கொள்கையை மாற்றிக் கொண்டது. கானடா மாகாணங்கள் பற்றி 1838-ல் டர்காம் பெருமகனார் செய்த அறிக்கையில் இக் கொள்கை முதன் முதலாக உருப்பெற்றது. அதன்படி அக் குடியேற்ற நாடுகளின் தலைவர் பிரிட்டிஷ் மன்னரின் நிலையில் நின்று அந் நாட்டுச் சாட்ட அவைகளில் பெரும்பான்மை ஆதரவு பெற்ற ஆட்களை அமைச்சராகக் கொண்டு ஆள்வர். தாய்நாடு, குடியேற்ற நாடு ஆகியவற்றின் உறவைத் தாக்காத எச்செய்தியிலும் அவர் பிரிட்டனின் அரசாங்கத்தையோ மன்னரையோ கலக்க வேண்டியதில்லை. தாய் நாட்டின் உறவு, அரசயிலமைப்பின் அடிப்படைஆகியவற்றில் மட்டுமே தாய் நாட்டின் அரசாங்கத்தோடு மன்னரும் தலையிடுவர். மற்ற வகையில் அவர்கள் உள் நாட்டுச் செய்திகளில் கிட்டத் தட்ட முற்றிலும் தன்னாண்மையுடையவர்களே. குடியேற்ற நாடுகளின் அரசியல் அமெரிக்கா முதலிய நாடுகளை விடக்கூடத் தாய் நாட்டின் அரசியலைப் பின்பற்றியே அமைவது இயற்கை. அதற்கேற்பவே கிட்டத் தட்ட அவற்றிலெல்லாவற்றிலும் இரண்டு அவைகள் உள்ளன. அமைச்சர் தம் ஆட்சிவகையில் அவைகளிடமே பொறுப்புடையவர்களாயிருந்தனர். மன்ற நடை முறைகளும் பெரும்பாலும் பிரிட்டனைப் பின்பற்றியவையே. |