பக்கம் எண் :

குடியாட்சி145

   ஆயினும் இவை ஒன்றாயினும் முற்றிலும் பிரிட்டனை ஒத்தும் இருக்கவில்லை. குடியேற்ற நாடுகளுள் ஒன்றேனும் பிரிட்டனைப் போலத் தனியரசாயில்லை; அவ்வப்போது ஏற்பட்ட குடியேற்றங்களைத் தனி அரசுகளாகக் கொண்ட கூட்டுறவு அரசியல்களாகவே அவைநிலவுகின்றன அதோடு அவற்றின் கூட்டுறவுத் தலைவராய் அமைந்து தொழிலாற்றும் ஆட்சித் தலைவர்கள் (கவர்னர்கள்) பெரும்பாலும் மன்னரைப் போலவே உரிமையுடையவர்களாயினும் , பிரிட்டனில் பிற்காலத்தில் சட்டங்கள் வகையில் மன்னரது மறுப்பு உரிமை கைவிடப் பட்டதுபோல் அவர்கள் மறுப்புரிமை கைவிடப் படாமலேயிருந்து வருகின்றன.

   தாய் நாட்டுக்கும் குடியேற்ற நாடுகளுக்கும் உள்ள வேற்றுமைகளுள் இன்னொன்று மிகவும் தலை சிறந்தது. பிரிட்டனின் குடியாட்சிக் கருத்துக்களை உடன்கொண்டு சென்ற குடியேற்ற நாடுகள் ஒன்றேனும் அதன் பெருங்குடி யாட்சியின் மரபைக் கொண்டு செல்லவில்லை. ஆகவே பிரிட்டனைப் பின்பற்றி இவற்றில் மேலவை ஒன்று ஏற்பட்டபோதிலும் இம்மேலவை பிரிட்டனைப் போல் வழி வழி வந்த பெருங்குடிமக்கள் உரிமை கொண்டதாக இல்லை. பொது அவையைப் போலவே தேர்ந்தெடுக்கப் பட்டதாகவோ, உறுப்பினர் வாழ்நாள் அளவுக்கோ அல்லது ஒரு குறிப்பிட்ட கால எல்லையளவுக்கோ அமர்வு பெற்றதாகவே அவை இயங்குகின்றன. சில தனியரசுகளில் இம் மேலவை வேண்டியதில்லை யென்று கைவிடப்பட்டுக்கூட வருகின்றது.

   குடியேற்ற நாடுகளுள் முதல் முதல் குடியேற்ற நாட்டு அரசியலுரிமை பெற்றது கானடாவாகும். அது