| தனியரசியல்கள் பெரும்பாலும் மாவட்டத் தன்னாட்சி அளவிலேயே நிலைபெறுகின்றன. மேலவைகள் பற்றியமட்டில் கானடாவில் கூட்டுறவு அரசியலில் உறுப்பினர் தேர்ந்தெடுக்கப் படுவதேயில்லை. முதல் அமைச்சரைக் கலந்துகொண்டு ஆட்சி முதல்வர் (கவர்னர் ஜெனரல்) வாழ்நாள் எல்லைக்கு உறுப்பினரை அமர்த்திக் கொள்கின்றனர் பொதுப்படக் கானடாவின் மேலவை அரசியல் வலிமை குன்றியதாக இருந்து வருவதால் அதனை உரப்படுத்தும் வகையில் சீ்ர்திருத்தங்கள் செய்யவேண்டு மென்று முயற்சிகள் செய்யப்பட்டு வருகின்றன, தனி அரசியல்களின் குவபெக் நோவாஸ்கோஷியா ஆகிய இரண்டுக்கு மட்டுமே மேலவைகள் உண்டு மற்றவற்றுக்கு இல்லை. ஆஸ்திரேலியாவில் மேலவை உறுப்பினர்கள் கீழவைஉறுப்பினர்களிலும் சற்று உயர்ந்த தேர்தல் வரையறையுடன் தேர்ந்தெடுக்கப் படுகின்றனர். தனி அரசியல்களில் இரண்டில் உறுப்பினர் கானடாக் கூட்டுறவு அரசியலைப் பின்பற்றி வாழ்நாள் எல்லை முழுமைக்கும் அமர்த்தப்படுகின்றனர். மற்ற நான்கிலும் ஆஸ்திரேலியக் கூட்டுறவைப் போலவே அவர்கள் தேர்ந்தெடுக்கப் படுகின்றனர். தென் ஆபிரிக்காவில் மேலவை உறுப்பினர் தேர்ந்தெடுக்கப் படுவதுடன் மக்கள் தொகையளவுக் கேற்ற விழுக்காட்டில் தேர்ந்தெடுக்கப் படவும் முயற்சிகள் செய்யப் படுகின்றன இதன்பயனாக இந்நாட்டில் அரசியலில் வேறெங்குமில்லாப் புது நிலைமை அடிக்கடி ஏற்பட்டு வருகிறது. மற்றெல்லா நாடுகளிலும் கீழவை பெரும்பாலும் வெறித்த முற்போக்குடையதாயிருக்க, இவ்வொரு கூட்டுறவில் மட்டும் மேல |