வை கீழவையை விடக்கூட முற்போக்கும் புரட்சி மனப்பான்மையுமுடையதாயிருக்கிறது. கட்சிப் போக்குகளை உற்று நோக்கினாலும் தாய் நாட்டிற்கும் குடியேற்றங்களுக்கும் ஒரு தெளிவான வேறுபாடு காணப்படும். பிரிட்டனில் மூன்று கட்சிகளும் மாறி மாறி வளர்ந்தும் நலிந்தும் அரசியல் கவறாட்ட மாடி வரிலும், பெரும்பாலும் அவற்றுள் முதன்மை நிலையிலிருந்து வருவது பழய நிலஉடைமையும் பிறப்புரிமையும் செல்வாக்கும் உடைய வகுப்புகளின் மரபில்வந்த கன்சர்வேட்டிவ் கட்சியே, அடுத்தபடியாகக் குடியாட்சியில் முற்போக்குடைய லிபரல் கட்சியும் அண்டைக்காலங்களில் தொழிற் கட்சியும் முன்வந்துள்ளன. உண்மையில் இக் கடைசிக் கட்சி தனிப்பட அரசாங்கமமைத்தது இரண்டாம் உலகப் போர் முடிவிலேயே (1945) ஆகும். ஆனால் குடியேற்ற நாடுகளில், சிறப்பாக ஆஸ்திரேலியாவில், பிறப்புரிமை யுடைய உயர் வகுப்புக்கு இடமில்லாததனால் தொழிலாளர் வகுப்பின் சார்பில் தொழிற் கட்சியே தொடக்க முதற்கொண்டு உயர்நிலையடைந்திருக்கிறது. பிரிட்டன் நாட்டுச் சட்டங்களை விட இக்குடியேற்ற நாட்டுச் சட்டங்களே நாட்டுத் தொழிலாளர் நலங்களைப் பெரிதும் சார்ந்தவையாயிருக்கின்றன. மேற் கூறிய செய்திகளால் பிரிட்டனின் முன்மாதிரியைப் பின் பற்றிய ஐரோப்பிய நாடுகள் தமக்கும் தம் மரபுக்கும் வளர்ச்சி முறைக்கும் புறம்பான அரசியலைப் பின்பற்றியதினால் இடர்ப்பட்டு இன்னும் பிரிட்டனை விடப் பிற்பட்டேயிருந்துவருகின்றன. அமெரிக்கா சில வகைகளில் முற்பட்டும், குடியேற்ற நாடுகள் இன்னும் |