மிகுதியாக அவ்வளர்ச்சியுடன் ஒன்றுபட்டு மிருப்பதனால் தாய் நாட்டினும் மிகுதியாகக் கூடச் சில வகைகளில் அவை முற்பட்டும் இருக்கின்றன என்று கூறலாம். இனி இக் குடியேற்ற நாடுகளைப் போலவோ, அமெரிக்கா, ஐரோப்பா ஆகியவற்றை ஒத்தோ பிரிட்டனின் நாகரிகம், அரசியல் வளர்ச்சி ஆகியவற்றுடன் தொடர் புடையவையாயிராத இந்தியா முதலிய சார்பு நாடுகளையும் பிற நாடுகளையும் ஆராய்வோம். 9. தற்கால இந்திய அரசியல் முறையும் அரசியல் இயக்கங்களும் இந்தியப் பெருநிலப்பரப்பை ஒரு நாடு என்றும் ஒரு கண்டம் என்றும் கூறுபவர் உண்டு. உலகில் 8-ல் ஒரு பங்காக இருக்கும் அதன் பரப்பும் 5-ல் ஒரு பங்காக அமைந்த மக்கள் தொகையும் பல இன, மொழி, சமய நாகரிகப்படிகள் அடங்கிய இதன் பலவகைப் பெருக்கமும் பிறவும் இதனை ஒரு நாட்டைவிட எவ்வளவோ பெரிதாக்குகின்றன. அளவு, மக்கள் தொகை ஆகிய இரண்டாலும் அது ஒரு சிறு கண்டம் அல்லது துணைக் கண்டம் என்னலாம். பலவகைப் பெருக்கத்தைப் பார்த்தாலோ கண்டங்கள் எதுவும்கூட இதற்கு ஈடில்லை. ஐரோப்பா, ஆபிரிக்கா, ஆஸ்டிரேலியா, அமெரிக்கா ஆகிய நான்கு கண்டங்களிலும் சேர்த்துக் கிட்டத்தட்ட ஒரு சமயமே நிலவுகிறது. ஆசியாவில் இந்தியா நீங்கலாக மூன்று நான்கு சமயங்களே நிலவுகின்றன. நாடு என்று சிலர் கொள்ளும் இந்தியப் பெருநிலப் பரப்புக்குள்ளோ ஒன்றி |