பக்கம் எண் :

150குடியாட்சி

ரண்டு நீங்கலாக எல்லா உலகச் சமயங்களும் இடம் பெற்றுள்ளன. போக நாடு என்று கூறப்படும் இந்தியாவிலேயே ஒருசமயம் என்று அழைக்கப்பட்ட, ஆனால் உண்மையில் பல சமயங்களின் கூட்டுறவாகிய இந்து சமயமும், உள்ளது. உலகில் தோன்றிய சமயங்களில் ஒரு சில நீங்கலாக அனைத்தும் இங்கே தோன்றியவையே. மொழிகளில் உலகமொழிகள் ஏழுநூற்றுச் சில்லறை. இந்தியாவினுள் அவற்றில் நானூற்றுக்கு மேற்பட்ட மொழிகள் உள்ளன. மக்கள் இனங்களை நோக்க, உலகின் பிற பகுதிகளிலுள்ள எல்லா இனங்களும் வேறெங்குமில்லாத தனியினமும் இந்தியாவில் உண்டு. நாகரிகப்படிகளை நோக்க, உலக நாகரிகத்தின் உச்சிநிலை முதல் நாகரிகத்தில் கடைப்பட்ட மக்கள்வரை, முதல்தரச் செல்வர் முதல் கடைப்பட்ட பஞ்சைகள் வரை இப்பரப்பில் உண்டு. எனவே இதனை நாடு என்பது மட்டுமன்றிக் கண்டம் என்பதும் கூடக் குறைபட்ட குறிப்பேயாகும். இது ஒரு உலகம், ஒரு குட்டி உலகம் ஆகும். இதனை அளவில்மட்டும் ஒத்தது சீனநாடு; பலவகைப் பெருக்கத்தில் ஓரளவு ஒத்தவை உருசியாவும் அமெரிக்காவுமே.

   இந்தியா ஓர் உலகமாயினும். வெளி உலகுடன் எவ்வளவோ தொடர்புடையதாயினும், அவ்வுலகுடன் சேர்ந்த உலகின் ஒரு பகுதி என்றுமட்டும் சொல்வதற்கில்லை. உலகெனப் பரந்துநின்ற இதில் வெளி உலகினின்று வேறுபட்டுக் கிடக்கும் வேறுபாடுகளும் தனிப் பண்புகளும் அடிப்படைத் தனி ஒற்றுமைகளும் பல. பிறப்பு வேற்றுமைப் பாகுபாடு (சாதி வகுப்பு), ஊழ்வலியில் நம்பிக்கை, மறுபிறப்புக் கொள்கை, ஆயிரக்கணக்