குடிமக்களிடையே வந்து கலந்த ஆரியர் இவ்வேறுபாடுகளைப் பயன்படுத்தியும் பெருக்கியும் நிலவரமாக்கியும் ஒரு நாடாயில்லாது ஒரு தனி உலகமாய் இருந்த இதனை உண்மையிலேயே பல நாடுகளாகவும் பல கண்டங்களாகவும் ஆக்கினர். திராவிடர்களிடையே நிலவிய தொழில் பாகுபாடும் நாகரிக உயர்வு தாழ்வுகளும் பிறப்பு வேற்றுமை, இன வேற்றுமை, சமய வேற்றுமைகளாக மாற்றப்பட்டன. ஒரே இனத்துட்பட்ட பல்வேறு அரசர் குலங்கள் ஞாயிற்றுவழி என்றும் திங்கள்வழி என்றும் அழற்கடவுள்வழி என்றும் பகுக்கப்பட்டன. மேலும் ஆரியச்சார்பென்றும் ஆரியர் காலமென்றும் திராவிடர் (சூத்திரர்) என்றும் ஆரியர் நலங்களுக் கேற்றபடி பகுக்கப்பட்டன. வேறுபட்டுப் பூசலிட்ட அவர்கள் பூசலிடையே ஆரியரும் அவரைச் சார்ந்தவரும் ஓரினமென ஒற்றுமையுற்று அவர்கள் ஆக்கத்தைச் சுரண்டித் தம் ஆக்கத்தை மேம்படுத்தினர். இதன் பயனாக வரலாற்றுக்கால இந்தியா ஒரு பைத்தியக்காரர் விடுதிபோ லியங்கலாயிற்று. இருக்குவேத காலங்களில் தூய ஆரியர் உறைவிடமாகக் கொள்ளப்பட்ட ஏழு ஆற்றுநிலம் (சப்த சிந்து நாடு அதாவது) (பஞ்சாப் முதலிய வடமேற்குப் பகுதிகள்) இன்று முக மதிய சமயமும், பாரசீகச் சார்பு மொழிகளும் பயிலும் வேற்று நிலமாயிருக்கின்றன, இதிகாசகாலத்தில் ஆரிய ரகம் என்று கூறப்பட்ட கங்கைநாடு (ஐக்கிய மாகாணங்கள்) ஆரிய, பாரசீக, அராபிக் கலவைச் சொற்களாலான இந்திமொழிக்கு நிலைக்களமாயிற்று. பெரும்பான்மைத் திராவிடர் கலப்புப்பெற்ற வங்கம், கூர்ச்சரம், மராடம் முதலிய பகுதியிலுள்ள மக்கள் தம்மை ஆரியரெனக் |