பக்கம் எண் :

குடியாட்சி153

கொண்டு பிற திராவிடமக்களை விலக்கிவாழ்ந்தனர். இதன் பயனாக வங்கம், பீகார், அஸாம் முதலிய இடங்கள் புத்த சமண இஸ்லாமிய சமயங்களின் நிலைக்களங்களாயின.

   முழுக்க முழுக்கத் திராவிடரே வாழும் மலையாளம், தெலுங்கம், கன்னடம், துளுவம் ஆகிய பகுதிமக்கள் ஆரியப்பூச்சுப்பூசி எப்படியாவது ஆரியராக இடம் பெற்றுவிடவேண்டும் என்ற பஞ்சை எண்ணத்தால் ஆரியர் உதைத்தும் அவர்கள் அடிவருடிகள் ஆயினர். ஆரியரால் சூத்திரர் என்று இவர்கள் அழைக்கப்படினும் தம்மைப்போல் அடிமைப்படாத சூத்திரரை (பழங்குடிமக்களை)த் தாழ்த்தி வைப்பதில் முனைந்து மன நிறைவடைகின்றனர். திராவிட உயிர்ப்பு முற்றிலும் அவியாது கொழுந்துவீசி இந்தியாவுக்கு அவ்வப்போது சமயம் நாகரிகம் கலை ஆகியவற்றை அளித்துக் காத்துவரும் இந்தியாவின் தாயகமான தமிழ் நாட்டிலும் தாம் ஆரியர் எனக் கொண்டு தருக்கும் ஒரு திராவிடப் பழங் குருதியினம் வடகலை உயரவும் தென் கலை தாழவும் பாடுபட்டுத் தன் தாய் யாரென்பதை அறியாது தாய்ப்பழி சூழ்கின்றது. இந்தியப் பரப்பு முற்றிலும் பழந்திராவிடக் குருதி குன்றாத பெருங்குடி மக்கள் தாழ்த்தப் பட்டு வேறு வகையின்றிப் புத்த சமண சமயங்களையும் முகமதிய கிறித்தவ சமயங்களையும் சார்ந்தும், சமய வகையில் விடுதலை பெற்றனரே யன்றி மொழி வகையிலும் நாகரிக வகையிலும், விடுதலை பெறாது தடுமாறுகின்றனர்.

   இந்நிலையில் இந்தியாவின் வரலாறு பல நாடுகளின் வரலாறுகளாய் விட்டதில் வியப்பு எதுவுமில்லை. இந்தியா ஒரு நாடாக வேண்டுமானால் அதற்கு ஒருமைதந்த, தரும், இனமாகிய பழந் தமிழகத்தின் வழி தமிழரும் அவரைச்