சார்ந்த திராவிடரும், சமய மொன்று தவிர அவர்களுடன் ஒன்றுபட்ட முகமதியரும் கிறித்துவரும் இப் பெரு நிலப்பரப்பின் வாழ்வில் ஆரிய நச்சுப் பூச்சுத்தவிர்ந்து தனி மக்களாதல் வேண்டும். ‘காலத்தால்’ ஏற்படும் இத்தகைய பிரிவினை ஒன்றாலன்றி இப்பெரு நிலப் பரப்பு ஒற்றுமைப் படுதல் அரிது. மேற் போக்காகப் பெயரளவில் ஒற்றுமை பேணி அடிப்படை வேற்றுமையின் மீது கட்டடம் கட்டுவது உண்மையில் மேன்மேலும் பிரிவினைகளை வரவழைப்பதேயன்றி வேறன்று. மேலே ஆராயப் போகும் உருசிய நாட்டின் அமைப்பு முறை இவ்வகையில் இந்தியாவுக்கும் தமிழ் நாட்டுக்கும் ஒரு சிறந்த படிப்பினை தருவதாகும். திராவிட கால இந்தியாவின் அரசியல் முடியரசு நிலைப்பட்டதாயினும் நகர் மன்றம், மாவட்ட மன்றம் ஆகியவற்றையும் செயற் குழு, உட் குழு முதலிய ஆட்சி அமைபையும் உடையதாயிருந்தது. கங்கை நாட்டில் ஆண்ட நந்தரும் மோரியரும் பேரரசு ஏற்படுத்தி இவற்றைச் செயற்படுத்தினார். குப்தர் காலத்தில் அரசியல் தழைத்தோங்கியதனால் அக்காலமே ஆரியர் பொன்னாட்சிக் காலம் என நிலவிற்று. தென் இந்தியாவிலும் தக்காணத்திலும் சளுக்கர் இரட்டர் (ராஷ்டிரகூடர்) ஆந்திரர், பல்லவர் முதலிய பல கால்வழிகளில் பேரரசர் ஏற்பட்டு இவற்றைப் பயன் படுத்தினர். கி.பி. ஆயிரத்தை ஒட்டிச் சோழரும் அவரைப் பின் பற்றி விசய நகர மன்னரும் மராட்டரும் தெற்கில் அரசு வகுத்தனர். வடக்கில் ஆப்கானியக் கால்வழியினனாகிய சேர்சாவும் (Sher Shah) முகலாய பேரரசர் அக்பரும் அரசியல் பொருளியல் வல்லுநராகிய அபுலபாசல், தொடர்மால் ஆகியவாக்ள் உதவியுடன் அதனை விரிவுபடுத்தினர்.18-ம் நூற்றாண்டின் இறுதியிலும் 19-ம் நூற்றாண்டின் |