தொடக்கத்திலும் பிரிட்டிஷ் வாணிகக் குழுவினர் ஆட்சி வகுத்த போது பண்டை மரபுடன் வளர்ச்சி யடைந்த இம் முறையே சிற்சில மாறுதல்களுடன் பிரிட்டிஷ் ஆட்சிமுறையாக மாறிற்று. இந்தியாவில் ஏற்பட்ட பல அரசியல் கொந்தளிப்புகளிடையேயும் அரசியல், சமய, வாழ்வியல் பண்புகள் உண்மையில் கெடாமல் நன்கு பேணப்பட்டு வளர்ந்தன என்பதை வரலாறு தெளிவுபடக் காட்டுகின்றது. இதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்று, பண்டைய இந்திய அரசியலின் நகராண்மையும் ஊராண்மையும் நகர்களில் சீர் குலைந்தாலும் சிற்றூர்களில் பேணப்பட்டு வந்தன. போர்களாலும் வெளிநாட்டார் போட்டியாலும் நகர்களின் கைத்தொழிலும் வாணிகமும் அழிந்தன. ஆனால் ஊர்களின் சிறு தொழிலும் உழவும் யார் கொள்ளையாலும் கெடாமல் நலிந்தேனும் வாழ இடமிருந்தது. அவற்றின் மூலம் அரசர் கால்வழிகள் மாறுபட்ட காலங்களிலும் ஆட்சி முறைகெடாது நிலைமைக்குத் தக்கபடி அலைகள் போல விழுந்தெழுந்து அமைந்தன. பிரிட்டிஷ் வாணிகக் குழு இந்தியாவை நாடி வந்த காலம் பிரிட்டிஷ் இளைஞர் அமெரிக்காவில் குடியேறத் தொடங்கிய காலமாகிய 17-ம் நூற்றாண்டே. அந் நூற்றாண்டுக்குள் அமெரிக்கா பிரிட்டிஷார் கைவசமாயிற்று. இந்தியாவிலோ அவர்கள் வாணிகம் மட்டும் பரந்தது. 18-ம் நூற்றாண்டில் பிரிட்டன் அமெரிக்காவை இழந்தது ; இந்தியாவைப் பெற்றது. கிளைவ், வாரன் ஹேஸ்டிங்ஸ் ஆகிய முதற்கால வீரர் மூலமும் ஹேஸ்டிங்ஸ் பெருமகன், டெல்ஹௌசி போன்ற அரசியலார் மூலமும் இந்தியா படிப்படியாகப் பிரிட்டிஷ் ஆட்சியுட்பட்டது. 18-ம் நூற் |