றாண்டில் பம்பாய், வங்காளம், சென்னை ஆகிய மூன்று முதன் மாகாணங்கள் வகுக்கப் பட்டன. 19-ம் நூற்றாண்டின் முதல் பகுதிக்குள் மீந்த மாகாணங்களும் அமைக்கப் பட்டன. வடமேற்கு எல்லைப் புறமும் அஸாமும் இறுதியில் இவற்றுடன் இணைக்கப் பட்டன. இலங்கை பர்மா பலூசித்தானம் ஏடன் ஆகியவை இந்தியப் பேரரசுடன் இணைக்கப் பட்டன. ஆயிரக் கணக்கான ஆண்டுகளாகத் தம் ஆட்சி எது, வெளியார் ஆட்சி எது என்ற வேற்றுமை அறியாத இந்தியப் பெருநிலப்பரப்பின் பஞ்சை மக்களிடையே பிரிட்டிஷ் ஆட்சி வெளியாட்சி என்ற உண்மை மட்டும் எளிதில் பரந்தது. அதன் பயனாக இந்திய உலகின் வரலாற்றிலேயே முதன் முறையாக 1857-ல் மக்கள் எழுச்சி ஒன்று ஏற்பட்டது. இதனைப் படைவீரர் கிளர்ச்சி (Sepoy Mutiny) என்று பிரிட்டிஷார் கூறினர். இதன் பயனாக வாணிகக் குழுவின் கைவசமிருந்து பிரிட்டிஷ் அரசியல் மன்றம் ஆட்சி உரிமையை அகற்றி மன்றத்தின் இணக்கத்துடன் அவ்வாட்சியைப் பிரிட்டிஷ் மன்னர் பிரானிடம் ஒப்படைத்தது. பிரிட்டனின் மன்னரே இந்தியப் பேரரசராயினர் அவர் பெயரால் இந்தியாவில் ஆட்சி செலுத்தும் இந்திய முதல் தலைவர் (Governor General) மன்னரின் ஆட்பெயர் (Viceroy) எனவும் வழங்கப்பட்டார். வாணிகக் குழுவின் இந்திய ஆட்சி உரிமை வாணிகக் குழு மன்றம் (Board of Councillors) வசமிருந்தது. இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி ஏற்பட்ட பகுதிகளிலெல்லாம் ஒர் ஆட்சித் தலைவர் (Governor) இருந்தனர். 1773-ல் ஏற்பட்ட ஒழுங்கு முறைச் சட்டத்தால் (Regulating Act) கல்கத்தாவிலுள்ள தலைவரே முதல் |