பக்கம் எண் :

குடியாட்சி157

தலைவராயினர். தலைவரும் முதல் தலைவரும் குழு மன்றத்தைக் கலந்து அமர்த்திய மூன்று ஐரோப்பிய செயற் குழு உறுப்பினர் உதவியால் ஆட்சி செலுத்தினர்.

   படைவீரர் கிளர்ச்சியின்போது பிரிட்டனில் ஆட்சி செலுத்தியவர் விக்டோரியா அரசி. இவர் இந்தியாவின் பேரரசி என 1858-ல் இந்தியாவிலும் முடிசூட்டப் பெற்றார். அச்சமயம் அவர் பழைய பிரிட்டிஷ் மன்னரைப் போலவே இந்திய மக்கள் நலங்களைப் பேணுவதாக உறுதியளித்து அவர்களுக்கு ஒர் அரசுரிமைத் தாள் வழங்கினர். இது இந்தியப் பேருரிமைத் தாள் எனப் பெயர்பெறும். இதன் மூலம் இந்திய மக்களுக்கு அடிப்படை மனித உரிமைகள், சமய, கலை, நாகரிக உரிமைப் பாதுகாப்பு ஆகியவை அளிக்கப்பட்டன. மேலும் இந்தியப் பெரு நிலப்பரப்பில் அமைதியைக் காப்பதுடன் நில்லாது பிரிட்டிஷ் ஆட்சி படிப்படியாக இந்தியரை விடுதலைக்கும் பொறுப்பாட்சிக்கும் கொண்டு செல்லும் என்று பிரிட்டிஷ் அரசியலின் பேரால் பேரரசி யார் உறுதிமொழி தந்தனர். பிரிட்டிஷ் ஆட்சியில் இந்தியாவில் ஏற்பட்ட அரசியமைப்புக்கும் அரசியல் வளர்ச்சிக்கும் இதுவே அடிப்படையாயிற்று. பிரிட்டனில் முதல் ஹென்ரி அருளிய உரிமைத் தாளுடனும் ஜான் தந்த பேருரிமைத் தாளுடனும் இதனை ஒப்பிடலாம்.

   விக்டோரியா பேரரசியின் ஆட்சிக்கு உட்பட்ட இந்தியப் பெருநிலப்பரப்பு முழுமையும் உண்மையில் ஒரே நாடாகவோ ஒரே தன்மையுடைய பேரரசாகவோ திகழவில்லை. சமய, கலை. நாகரிக வகைகளில் இந்தியாவில் ஏற்பட்ட வேறுபாடுகள் போதாமல் பிரிட்டிஷார் இந்தியாவில் ஆட்சியைப் பரப்பிய முறைகளால் வேறும் பல வேறுபாடுகள் நுழைந்தன. பிரிட்டிஷார் தம் ஆட்சியில்