பக்கம் எண் :

158குடியாட்சி

சேர்க்க முடியாது நேசநாடு என்ற நிலையில் விட்டுவிட்ட நாடுகள் சில. அவை இமயமலைச் சாரலில் உள்ள நேபாளம், பூட்டானம் ஆகியவை. இவற்றின் நிலை ஒரளவு இந்தியாவின் வடமேற்கிலுள்ள தனிநாடான ஆப்கனித்தானத்தைப் போன்றது. ஆயினும் பிரிட்டிஷாருடன் இவை மிக நெருக்கமான உறவு உடையவை. பிரிட்டிஷார் வருமுன்னும் வந்த பின்னும் அவர்களோ டொப்ப வாணிகமுறையில் வேறு சில வெளியார் தங்கள் ஆட்சி நிறுவிய இடங்கள் சிலவும் உண்டு இவற்றுள் சந்திரநாகூர், பாண்டிச்சேரி, காரைக்கால் முதலிய இடங்கள் பிரஞ்சு ஆட்சியிலும் சின்சுராடச்சு ஆட்சியிலும் கோவா, தையூ, தாமன் முதலியவை போர்ச்சுகீசிய ஆட்சியிலும் நிலவும் சிறுபகுதிகள் ஆகும்.

   வாணிகக் கழகத்தார் மூலம் பிரிட்டிஷார் நேரடியாகக் கைப்பற்றிய இடங்கள் மாகாணங்களாகவும் துணை மாகாணங்களாகவும் வகுக்கப்பட்டன. தொடக்கத்தில் மூன்று மாகாணங்களும், இந்தியா முற்றும் ஆட்சி பரந்தபின் மாகாணங்கள் பத்தாகவும் ஆயின, அண்மையில் 1939-ல் பர்மா தனி நாடாகப் பிரிவுற்றது. அதற்கிடையே ஒரிஸா, வடமேற்கு எல்லைப்புறம் ஆகியவை சேர்க்கப்பட்டு இப்போது 11 முதல் மாகாணங்கள் ஏற்பட்டிருக்கினறன. தில்லி நகரமும் குடகும் தனி மாகாணங்களாக விளங்குகின்றன.

   பிரிட்டிஷார் ஆட்சியில் நேரடியாகச்சேராமல் பழைய மன்னர்கள் ஆட்சியிலேயே நின்ற பகுதிகள் உண்டு. அம்மன்னர்கள் பிரிட்டிஷ் மன்னர் பிரானுடன் பலபடியான உடம்படிக்கைகள் வகுத்துப் பேரரசின் கீழ்ப்பட்ட சிறு மன்னர்களாய் ஆள்கின்றனர். அவர்கள் ஆட்சி