பக்கம் எண் :

குடியாட்சி159

பிரிட்டிஷ் ஆட்சிக்குக் கீழ்ப்பட்டதாயினும் இந்தியாவிலிருந்து பிரிந்த ஆட்சியாகும். இவர்கள் ஆளும் பகுதியைச் சிலர் சிறப்புப் பட இந்திய இந்தியா என்று விதந்து கூறுவர். ஆனால் உண்மையில் இந்திய இந்தியா என்பதை விட இந்திய இந்தியாக்கள் எனப்படுவதே பொருத்தம். ஏனெனில் அவற்றின் அரசியல் ஒருவகைப்பட்டது அன்று. சிறிதும் பெரிதுமான இவற்றின் தொகை ஏழு நூற்றுக்குமேலாம்.

   நேசநாடு, துணைமன்னர் நாடுகள், பிரிட்டிஷ் இந்திய மாகாணங்கள் ஆகிய இவை எல்லாவற்றிலிருந்தும் வேறாகப் பழைய பண்படா மலைக்குடிகள் பகுதிகள் ஒர் ஆணையாளர் தலைமையில் நேரடியாக மன்னர்பிரான் ஆட்பெயரின் ஆட்சியிலிருக்கின்றன. இந்தியாவை அடுத்த காடுகளிடையே பர்மா பலுச்சித்தானம், இலங்கை ஏடன் துறைமுகம் ஆகியவை பிரிட்டிஷ் ஆட்சிக்கு உட்பட்டன. இவற்றுள் பலுச்சிஸ்தானம் ஒரு துணை மன்னர் ஆட்சியிலுள்ளது. பர்மா முதலில் பிரிட்டிஷ் இந்திய மாகாணங்களுள் ஒன்றாகிப் பின் தனி நாடாயிற்று என்பது கூறப்பட்டது. இலங்கை ஒரு தலைவர் ஆட்சியுட்பட்டு இந்தியப் பேரரசுடன் இணைந்தாலும் நேரடியாக மன்னர் பிரானுடன் தொடர்புடைய குடியேற்றமாய் விளங்குகிறது. அராபிக்கடலிலும் வங்கக்குடாவிலும் உள்ள தீவுகளும் இதுபோல் நேரடியான ஆட்சி உடையவை.

   பிரிட்டிஷ் மாகாணங்களோ துணைமன்னர் நாடுகளோ மற்றப் பிரிவுகளோ உண்மையில் கலை, நாகரிகம் மொழி ஆகியவற்றை ஒட்டி இயற்கையாய் ஏற்பட்ட நாடுகள் அல்ல. வரலாற்று நிகழ்ச்சிகளின் பயனாகவும்